உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

103


அலை மோதி அடங்குவதுபோல்தான். அதனால் அபாயமான சூழ்நிலைகள் அடிக்கடி தோன்றவும் தோன்றும். ஆபத்தும், எலும்பு முறிவும், சுளுக்கும் நிகழவும்கூடும். அதனைத் தவிர்த்திடவே விதிமுறை களும் மிகமிகக் கடுமையாக உருவாக்கப்பட்டிருக் கின்றன. ஆக, எதிர்த்தாக்குதலில் ஈடுபடும் ஆட்டக் காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் ஈடுபட வேண்டும். பிடிக்க முயற்சிக்கும்பொழுது கால நேரத்தை அனுசரித்து, சூழ்நிலையை புரிந்துகொண்டு, ‘இது முடியும், இதனால் வெற்றியுடன் செயல்பட முடியும்’ என்று எண்ணித் துணிந்தே நடத்திட வேண்டும்.

பிடிமுறை எதுவானாலும், அதனை நிலைமைக் கேற்பத் தேர்ந்தெடுத்தே பயன்படுத்திட வேண்டும். இதுதான் பிடிக்கும் வெற்றியின் அற்புத ரகசியமாகும். அத்துடன், தன் சக ஆட்டக்காரர்களின் கூட்டு முயற்சியும், உடன் தொடர்ந்துவரும் ஒப்பற்ற ஒற்றுமையும்தான் ஒருவரை வெற்றிகரமாகப் பிடித்திடத் தூண்டுகிறது; செய்கிறது.

அதனால், ஒருவர் பிடிக்க முயற்சிக்கும்பொழுது, எதிரியைத் தப்பிப் போகவிடாத வகையிலே பிடித்திட வேண்டும். ஏனெனில், பாடி வருபவரைப் பிடிக்கப் போய் தவறி, அவர் தொட்டுவிட்டுப் போய்விட்டால், அவருடைய குழுவிற்கு ஒரு வெற்றி எண், தன் குழுவில் ஒருவர் குறைய, அவரது குழுவில் ஒருவர் அதிகமாக என்று பல நஷ்டங்கள் ஏற்பட ஏதுவாவதால், மிகவும் எச்சரிக்கையுடன் பிடிக்க வேண்டும்.

பிடிக்கும்பொழுது உணர்ச்சி வசப்படக்கூடாது, முரட்டுத்தனம் கூடாது. அசட்டுத் தைரியம் கூடாது.