பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 ம.பொ.சிவஞானம் நம்புகிறீர்களா? 'ஆம்' என்றால்,எப்படி என்பதை எடுத்துச் சொல்லுங்கள். அரசியல் சட்டத்தைத் திருத்தாமல், எந்த அதிகாரத்தை மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு மாற்ற முடியும்? இந்த அவைக்குக் கொடுத்திருக்கிற வெள்ளை அறிக்கை யில், நான் முன்னே சொன்னது போன்று சிற்சில அதிகாரங்களைத் தானே அரசு கேட்கிறது? முதல்வரவர்கள் என்ன நினைக் கிறார்களோ எனக்குத் தெரியவில்லை; கொள்கையை முழுசாகச் சொல்லி விட்டு. கோரிக்கையில் வெள்ளை அறிக்கையும் தீர்மானமும் பின்வாங்கி விடுகின்றன. மொத்தத்தில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்றுதான் கேட்கப்படுகிறது. அதிகாரப் பரவல் முறையை காங்கிரஸ் எதிர்க்கத் தயாராக இல்லை என்றால், இந்த வெள்ளை அறிக்கையை அது முணு முணுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லை. அதிகாரப் பரவல் முறையால் மாநிலங்களுக்கு முழு சுயாட்சி கிடைக்காது என்பது என்னுடைய முடிவு. பூர்ண சுயாட்சி என்றால் என்னவென்று சொல்லுகிறேன். கேளுங்கள்: இந்தியாவின் ஒருமைப்பாட்டை நாம் ஒப்புக்கொண்ட பிறகுங்கூட, அது 'கான்பெடரேஷன்' ஆக இருந்தால் போதும்" என்று நான் சொல்லமுடியும்; அதாவது ஒரு சங்கம் அமைத்து. அதில் அங்கம் வகிக்கும் நாடுகள் பரஸ்பரம் கருத்துக்களைப் பறிமாறிக்கொள்வது கான்பெடரேஷன். தமிழரசுக் கழகம் கேட்பது கான்பெடரேஷன் அல்ல: பெடரேஷன்தான் கேட்கிறது. கான்பெடரேஷன்' ஒரு சங்கமே யொழிய, அது சர்க்கார் அல்ல. அமெரிக்காவில் அப்படி ஒரு கான்பெடரேஷன் அமைத்து, 6 ஆண்டு காலம் நடத்திப் பார்த்தார்கள். அப்புறம் கான்பெடரேஷன் பாதுகாப்பானது அல்ல என்று உணர்ந்து பெடரேஷனுக்குத் திட்டம் உ