பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 23 திருத்தம் செல்லாது.' 'காஷ்மீரத்தைப் பொருத்தவரையில் இது இன்ன தேதியிலிருந்து தான் செல்லும்' என்றெல்லாம் போடப்பட்டிருக்கிறதே, அது ஏன்? ஒரே ஒரு மாநிலத்திற்கு மட்டும் விதிவிலக்கு எதற்கு? இது என்ன நியாயம்? - என்று கேட்கிறேன். அதைப் பார்க்கும் போது. தமிழ் நாட்டிற்கு மட்டுமே மாநில சுயாட்சி கொடுத்து ஆக வேண்டும் என்று கேட்க எங்களுக்கும் உரிமை உண்டு. காஷ்மீரத்திற்குத் தந்த சுயாட்சியை எங்களுக்கும் தந்து ஆகவேண்டும் என்று நான் கேட்கக் கூடாதா? ஒருவேளை, அங்கே கலகம் - பலாத்காரம் நடப்பதால் கொடுத்தோம்' என்று சொல்லுவார்களானால், நான் சொல்லு கிறேன். நானோ கலைஞரோ பிரிவினையை விரும்பாமல் இருக்கலாம். எங்கள் சந்ததியினர் எங்களைப் போலவே இருப்பார்கள் என்று நாங்கள் எப்படி உத்திரவாதம் கொடுக்க முடியும்? எனவே, நான் கேட்கிறேன். நாம். பிரிவினையைத் தடுக்கும் முறையில், ஒற்றுமையை ஓங்கச் செய்யும் வகையில். இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தினால் என்ன கெட்டுவிடும்? அதைத் திருத்த வேண்டும் என்று நான் கேட்பதற்காக யாரும் என் மீது கோபப்படவேண்டிய அவசியமில்லை. நமது முதலமைச்சர் அவர்களைச் சிலர். முஜிபுர் ரஹ்மான் அவர்களோடு ஒப்பிட்டுப் பேசிவிட்டார்களாம். அதில் என்ன தவறு இருக்கின்றது? ஒரு கட்சியிலே - தலைவர் பேரிலே பக்தி கொண்டவர்கள் - அன்பினால் எவ்வளவோ சொல்லுவார்கள். ஆண்டவனைப் பார்த்துச் சொல்வதைப்போல! ஆனால், அப்படிச் சொல்லுகின்றவர்களுக்கு முஜிபுர் ரஹ்மானைப் பற்றியும் தெரியாது. முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக இருந்தவர்களைப் பற்றியும் தெரியாது. அவர்கள் அன்பினால், ஆர்வம் மிகுதியால் கொடுக்கும் கோஷம் அது. அப்படிச் சொல்வதில் பிழை இல்லை.