பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 ம.பொ.சிவஞானம் படிக்கிறேன்: சேலத்தில் செய்தி நிருபர்களுக்கு இராஜாஜி அவர்கள் அளித்த பேட்டி 3-5-61 'தினமணி' இதழில் வெளி வந்திருக்கிறது. அதிலே. "இந்தியாவிலிருந்து பிரியும் அனுபவ சாத்தியமற்ற விருப்பத்தை ஒதுக்கிவிட்டு, முழு சுயாட்சி உரிமையுள்ள இராஜ்யத்திற்குத் தங்கள் கோரிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் குறைத்துக் கொள்ளுவார்கள் என்று நம்புகிறேன். உ "இராஜ்ய சர்க்கார்களின் ஆலோசனையின் பேரில் மத்திய சர்க்கார் நாட்டின் நிர்வாகத்தை நடத்தவேண்டும் என்று தேசத்தின் அரசிய லமைப்புச் சட்டம் விதிக்கிறது. ஆனால், இராஜ்ய சர்க்கார் ஒரு அடிமையாகி, மத்திய சர்க்காரின் மானியத்தைக் கேட்கிறது. அதற்காக டெல்லிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.' என்று சொன்னார். இதை ஏற்றுக் கொள்ளும் விதத்தில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினையை விட்டு மாநில சுயாட்சிக் கொள்கைக்கு வந்திருக்கிறது என்பதையும் நாம் மறந்து விடுவதற்கு இல்லை. இன்னும் இராஜாஜி சொல்லுகிறார்: "சம அந்தஸ்துள்ள சுயாட்சி உறுப்புக் களடங்கிய சமஷ்டி யூனியன் உருவாக்கவே நாம் உழைக்க வேண்டும். சமஷ்டி அமைப்பு உருவா வதைத் தவிர்க்க முடியாது என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். "1947 க்குப் பிந்திய அரசியல் வரலாறோ அதிகாரங்களை மத்திய அரசிடம் குவிக்கும் சபலம் எப்படி இடையறாது இயங்கி வந்துள்ளது