பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 ம.பொ.சிவஞானம் மொழிவழி இனம் சுதந்திரம் கேட்பதற்குத் தகுதி பெற்றிருக்கிறது என்றால். அது தமிழ் நாடாகத்தான் இருக்க முடியும். ஆனால் நாம் தமிழ்நாடு - தமிழ்மொழி - தமிழ் இனம் என்று சொல்லிக்கொண்டு பிளவுபட வேண்டிய அவசியமில்லை. இராஜ ராஜ சோழன். காலமல்ல இது. கரிகால் வளவன் காலமல்ல இது - ராஜேந்திர சோழன் காலமல்ல இது. எனக்கு விளங்குகிறது. அதனாற்றான். நாமே விரும்பி, சில அதிகாரங்களை மத்தியில் வைக்கிறோம். அதுதான் ஒருமைப்பாட்டிற்காக நாம் கொடுக்கின்ற அதிகப்படியான விலை. "சிங்களம் புட்பகம் சாவகமாதிய தீவு பலவினும் சென்றேறி - அங்கு தங்கள் புலிக்கொடி, மீன் கொடியும் நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு" "விண்ணை இடிக்கும் தலை இமயம் எனும், வெற்பை அடிக்கும் திறனுடையார் சமர்பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார் - தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு" "செந்தமிழ் நாடெனும் போதினிலே- இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே" என்றெல்லாம் பாரதியார் பாடினார். நாம் சரித்திரத்தால் மட்டுமல்ல: நில அமைப்பாலும் தென்கோடியில் இருக்கிறோம். ஆகவே, மத்திய ஆட்சி நமக்கு நெடுந்தொலைவில் இருக்கிறது. ஒன்றை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். யாரையும் குறை கூற வேண்டுமென்று இதை நான் சொல்லவில்லை. நிலைமையை விளக்குவதற்காகச் சொல்லுகிறேன். நண்பர் டெல்லி செக்ரேட்டேரியட்டுக்குள் நுழைந்தால் அங்கே நாம் அயல் நாட்டில் இருப்பது போன்று தோன்றுகிறது. மதிப்பிற்குரிய சித்ரா நாராயணசாமி. சுவாமிநாதன் போன்றவர்களுக்கு வேண்டுமானால், டில்லியில் உள்ளவர்களைப் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். தாய்மொழியையே நம்பியுள்ள என் போன்றோர் டெல்லி வீதிகளில் உலாவினால், மாஸ்கோ- பாரிஸ் வீதிகளில் உலவுவது போன்ற உணர்வுதான் ஏற்படுகின்றது. பாரிசுக்கும் டெல்லிக்கும் எந்தவிதமான வேற்றுமையும் தெரியவில்லை. இந்தத் தன்மையைத்தான்