பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 ம.பொ.சிவஞானம் வையுங்கள்! இன்னொரு முறை இந்த ஏழைத்தொண்டன் நோயாளியாக உள்ள நிலையில் - சிறையில் அடைபட்டு அங்கு உயிர் விடுவேனானால், எனது அஸ்தியிலிருந்து தோன்றுகிற பல லட்சக்கணக்கான தமிழ் வீரர்கள் மாநில சுயாட்சி தேட என்னைவிட 19 வயது குறைந்தவரான கலைஞர் அவர்களுக்கு உதவி செய்வார்கள். சுயாட்சித் தமிழகத்தின் முதல்வராகவும். அல்லது சுயாட்சிக் குடியரசின் தலைவராகவும் வருகிற வாய்ப்பை அவருக்குக் கொடுக்க விரும்புகிறேன். எனக்கு சிறைச்சாலையில் இடம் கொடுங்கள்' என்று இரு கை கூப்பி ஆளுவோரை வேண்டுகிறேன்; முடிவு உங்கள் கையில் இருக்கிறது. வணக்கம். 'ம.பொ.சி. யுடன் சிறை புகுவேன்!' முதல்வர் கலைஞர் உறுதி 27-4-74 அன்று சுயாட்சித் தீர்மானம் பற்றிய விவாதத்தை முடித்து வைத்து முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி பேசுகை யில் ம.பொ.சி. பற்றிக் கூறியது வருமாறு: நாம் நமது மாநிலத்திற்கு சுயாட்சி பெறப் போராட் வேண்டுமென்று தமிழரசுக் கழகத் தலைவர் சிலம்புச் செல்வர் கூறினார். சிறைக்குச் செல்லத் தயார்" என்றார். அப்படி ஒரு நிலைமை தவிர்க்க முடியாதது என்றால், நானும் அவருடன் சிறையில் இருப்பேன். அவரைத் தனியாக விடமாட்டேன்; என் அரசியல் பொது வாழ்வில் இந்தத் தீர்மானத்தை இரு அவையிலும் நிறைவேற்றியதன் மூலம் நான் ஒரு பெரிய கடமையைச் செய்து முடித்ததாகவே கருதுகிறேன். இந்தக் கடமையில் வெற்றி பெறப் பதவியையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் உரிய காலம் விரைவில் வரும் என்றே எதிர்பார்க்கிறேன். நம்புகிறேன் - தயாராக இருக்கிறேன்.