பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 50 அமைக்கப்பட்ட குழுவை நாமே சந்தேகிப்பது நல்லதல்ல. அந்தக் குழுவிலே இருப்பவரும், இன்று மேலவை உறுப்பினராக இருக்கக்கூடியவருமான மதிப்பிற்குரிய டாக்டர் ஏ. எல். முதலியார் அவர்கள் மேலவையிலே ஆற்றி இருக்கும் உரை களைப் பார்த்தாலே, மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப் பட்டிருப்பதை எவ்வளவு வன்மையாகக் கண்டித்திருக்கிறார். என்பது தெளிவாகத் தெரியும். நாமே குழுவைச் சந்தேகிப்பது முறையல்ல. அந்தக் குழுவினிடம் பொறுப்பை ஒப்படைத்து அந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்ததும் நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாக் கட்சியினரோடும் சேர்ந்து மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய உரிமைகளுக்காக, பெற வேண்டிய அதிகாரங் களுக்காக, வாதாடும். வாதாடிப் பயன் இல்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் போராட்டத்திற்கு அஞ்சியது அல்ல என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் : முதல் அமைச்சர் அவர்களின் விளக்கத்தை யொட்டி இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்திற்குத் தேவையில்லை என்ற காரணத்தால் இதற்கு அனுமதி தர நான் மறுக்கிறேன். (தமிழ் நாடு சட்டப் பேரவை நடவடிக்கைக் குறிப்புகள்:19-8-1969. பக்கங்கள் 254-259.)