பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மாநில சுயாட்சித் தீர்மானம் 1 21-8-70 அன்று தமிழக சட்டப் பேரவையில் மாநிலங்களுக்குச் சுயாட்சி வழங்கக் கோரும் உத்தியோகப் பற்றற்ற தீர்மானத்தை தமிழரசுக் கழகத்தின் சார்பில் திரு.ம.பொ. சிவஞானம் முன் மொழிந்தார். அப்போது அவர் பேசியது வருமாறு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! கீழ்க்கண்ட தீர்மானத்தை இந்த அவையில் முன் மொழிகிறேன். "மாநிலங்கள் சுயாட்சி அந்தஸ்தை உடையவையாக இருக்கும் வகையில் அவற்றிற்குக் கூடுதலான அதிகாரங்களை வழங்கவும். மத்தியில் மேலும் மேலும் அதிகாரங்கள் குவிந்துகொண்டிருப்பதைத் தவிர்க்கவும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்துவற்கு ஆவன செய்யுமாறு மத்திய அரசினை வற்புறுத்தும்படி தமிழ் நாடு அரசுக்கு இப்பேரவை பரிந்துரை செய்கிறது." இப்பொழுது நம் நாட்டிலுள்ள அரசியல் சட்டத்தை நாம் பொதுவாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அந்த அரசியல் சட்டத்திற்கு விசுவாசப் பிரமாணம் எடுத்துத்தான் நான் இங்கே அங்கம் வகிக்கிறேன். ஆனாலும், அந்த அரசியல் சட்டத்திலேயே ஒரு விதி இருக்கிறது. அதன்படி கால மாறுதலுக்கேற்ப அரசியல் சட்டத்தை மாற்றுமாறு கோரலாம். மாற்றவும் செய்யலாம். அந்த