பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 57 விதியின்படித்தான் இந்தத் தீர்மானத்தை இந்த அவையின் முன்பு கொண்டுவருகிறேன். நம் நாட்டிலுள்ள அரசியல் சட்டம் ரொம்ப விசித்திரமானது. அது, மூன்று அதிகாரப் பட்டியல்களைக் கொண்டிருக்கிறது. ஒரு பட்டியல், 'சென்ட்ரல் லிஸ்ட்' - மத்திய அரசினுடையது. அந்தப் பட்டியலிலுள்ள எந்த அதிகாரத்தையும் மாநில அரசு கோரிப் பெற முடியாது. இரண்டாவதாக. மாநிலத்திற்கென்று ஒரு பட்டியல் இருக்கிறது. அந்தப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் பொதுவாக மாநிலத்திற்கே உரியவை என்றாலும், மத்திய அரசு விரும்பினால். இராஜ்ய சபை மூலம் அந்த அதிகாரங்களில் எதையும் பறித்துக் கொள்ளலாம். இராஜ்ய மந்திரி சபை மீது மத்திய அரசுக்கு அவ நம்பிக்கை ஏற்படுமானால், 'சட்டம் ஸ்தம்பித்து விட்டது என்று சொல்லி - அனைத்து அதிகாரங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்த - ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வரலாம். மூன்றாவதாக, மத்திய அரசுக்கும் மாநிலத்திற்குமான பொதுப்பட்டியல் ஒன்று இருக்கிறது. 'கன்கரன்ட் லிஸ்ட்' என்று ஆனால், அந்தப் பட்டியல் மீது சுப்ரீம் பவர் மத்திய அரசுக்கே யொழிய, மாநில அரசுக்கு இல்லை என்று அரசியல் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. பொதுவாகப் பார்த்தால் அதிகாரங்கள் எல்லாம் மத்திய அரசுக்குத்தான். அது நல்லலெண்ணம் காட்டி விட்டுக் கொடுப்பதை, விட்டுக் கொடுக்கின்ற காலம்வரை, மாநில அரசு வைத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு அரசியல் சட்டம் சமஷ்டி நாடு எதிலும் இல்லை. இதனை. சமஷ்டி நாடுகளின் அரசியலமைப்புகளை ஆராய்ந்து பார்த்தே சொல்லுகிறேன். கதை ஒன்று சொல்கிறேன்; தென்னை மரம் ஏறத் தெரியாத ஒருவன், மரம் ஏறத் தெரிந்தவனைக் கூப்பிட்டு, தன் மரத்தில் ஏறித்