பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 ம.பொ.சிவஞானம் தேங்காய் பறிக்கச் சொன்னான். 'மரம் ஏறிய உனக்கு 1, மரத்தின் சொந்தக்காரனான எனக்கு 3-ஆக 4 காய்கள் பறி' என்று சொன்னானாம். மரம் ஏறியவன் தேங்காயைப் பறித்துக் கொண்டு கீழே இறங்கி, "ஏறியதற்கு ஒன்று இறங்கியதற்கு ஒன்று. நீயாகக் கொடுக்கிறேன் என்று சொன்னது ஒன்று. நானாக எடுத்துக் கொண்டது ஒன்று' என்று சொல்லி, நான்கையும் எடுத்துக் கொண்டு போய்விட்டானாம். அதைப்போல், மத்திய அரசுக்குரிய அதிகாரங்கள் அதற்கே! மாநில அரசுக்குக் கொடுத்ததையும் விரும்பினால் எடுத்துக் கொள்ளக்கூடிய அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு. இரண்டுபேருக்கும் பொதுவான அதிகாரங்களிலே முடிவான அதிகாரம் மத்திய அரசுக்கே! இந்த அரசியல் அமைப்பு முறை சமஷ்டி முறைக்கே மாறுபட்டதாக இருப்பதைப் பார்க்கிறோம். வேறு எந்த நாட்டிலும் கன்கரண்ட் லிஸ்டிலே இவ்வளவு அதிகாரங்களைக் குவித்து வைத்து - அவர்களுக்குத்தான், சமஷ்டிக்குத்தான் முடிவான அதிகாரம் என்று வைக்கவில்லை. அரசியல் சட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். நடைமுறையில் பார்த்தால், திட்டக் கமிஷன் ஒன்று இருக்கிறது. இராஜ்யங்களுக்கு உள்ள அதிகாரங்கள் எல்லாவற்றிலும் தலையிடக் கூடிய ஒரு போட்டி அரசாங்கமாகவே அது இருக்கிறது. பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் இந்தத் திட்டக் கமிஷனைப் பற்றி, 'நான் எதிர்பார்க்காத அளவுக்கு இது போட்டி அரசாங்கத்தைப் போல் வளர்ந்து தொலைந்து விட்டது" என்று மிக வருத்தத்தோடு சொல்லிவிட்டார். திட்டக் கமிஷன், கல்வித் துறையிலே தலையிடலாம் - விவசாயத்தில் தலையிடலாம். அது இடுகின்ற ஆணைகளை மாநில அரசானது ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த சூழ்நிலை இருக்கிறது.