பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 @ ம.பொ.சிவஞானம் கட்சிதான் இங்கும் ஆளும் கட்சி என்றால், மத்தியிலே உள்ள கட்சியினுடைய மேலிடம் இங்குள்ள ஆளுவோரைக் கூப்பிட்டு "இதை இப்பொழுது அமுல் படுத்தாதே; அதை இப்பொழுது விரும்பாதே" என்று ஆணையிடுகிறது. அரசியல் சட்டம் அனுமதி கொடுத்தாலும் மாநிலத்திற்கு உரிமை அளித்தாலும். கட்சிக் கட்டுப்பாடு. மேலிடத்தின் உத்திரவு அந்த உரிமைகளை அனுபவிக்க முடியாமல் தடையாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, அது மாநிலங்களுக்குரிய அதிகாரங்கள் இன்னின்ன என்பதைத் தெளிவுபடுத்தும் பிரச்னையை மீண்டும் புனராலோசனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என்று இந்தத் தீர்மானத்தின் மூலம் கூற விரும்புகிறேன். அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்து 19-ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 19-ஆண்டு அனுபவத்தை வைத்துப் பார்த்தாலும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான அதிகாரப் பங்கீடு பற்றிய சட்ட விதிகளை மீண்டும் புனராலோசனை செய்ய வேண்டுமென்பதே எந்தக் கட்சியும்-என்னோடு வேறுபாடு உள்ள கட்சி கூட ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தெரிகிறது. எல்லா மாநிலங்களிலும் 20 ஆண்டுகள் ஒரே கட்சி அதிகாரத்தில் இருந்தபொழுது இந்தக் குறைபாடுகள் வெளியில் தெரியவில்லை; தெரியாமல் மறைக்கப்பட்டு வந்தன. ஆனால் அநேக மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆள வந்துவிட்டன. அவைகளால் அரசியல் சட்டத்தில் உள்ள குறைபாடுகள். கோணல்கள் வெளிப்படுத்தப்பட்ட காரணத்தால், அரசியல் சட்டத்தையே மாற்றவேண்டிய அரசியல் அமைப்புப் பற்றிப் புனராலோசனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். கேரளத்தின் முதல் அமைச்சர் ஒரு கருத்தைச் சொன்னார்; அவர். 'அரசியல் சட்டத்தை உடைக்கிறேன்' என்றாரோ, அல்லது அரசியல் சட்டத்தைத் திருத்துகிறேன் என்றாரோ பத்திரிகைச் செய்தியே