பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 61 விவாதத்திற்குரியதாகி விட்டது. அவர், "திருத்தந்தான் கோரு கிறேன் என்று சொல்கிறார். ஆனால், மத்தியினுடைய உள்துறை அமைச்சர், 'வா' என்று அவரை டில்லிக்கு கூப்பிட்டிருக்கின்றார். போலீஸ் ஸ்டேஷனுக்குக் குற்றவாளியைக் கூப்பிடுகிற மாதிரி "டெல்லிக்கு வா" என அழைத்திருக்கிறார். அப்படிக் கூப்பிடுகிற முறையிலே டெல்லி உள்துறை அமைச்சகத்திற்கு அதிகாரம் இருக்கிறது அரசியல் மரபை மீறுகிற அரசாக அது இருக்கிறது. தி.மு. கழகம் மக்களிடத்திலே மிகுந்த செல்வாக்கு கொண்டுள்ளது அதனை, அதற்கு ஏற்பட்ட பல சோதனைகளிலே கூட, அது உறுதிப்படுத்தி வந்திருக்கிறது. அத்தனை உபதேர்தல் களிலும் வெற்றி கண்டிருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இத்தனைத் துணைத் தேர்தல்கள் அந்த மாநிலத்தைச் சோதிக்க வில்லை. இடைத் தேர்தல்கள் மேலும் மேலும் வருகின்றன. இவ்வளவு செல்வாக்கை அது மக்களிடம் பெறக் காரணம். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆட்சியின் பொழுது இருந்த நிலையை மாற்ற முயல்வதுதான். மத்தியிலுள்ள ஆட்சிக்கு மாநில ஆட்சி அடங்கிச் சென்ற காலம் போய்விட்டது. மாநில மக்களுடைய எண்ணத்தைப் பிரதிபலிக்கத் தக்க வகையில், இந்த மாநிலத்தின் தனித் தன்மைக்கு - மாநிலத்தின் தனிப் பழக்க வழக்கத்திற்குத் மாநிலத்தில் தனிப்பாரம்பரியத்திற்கு மாநிலத்திற்கு தனி வரலாறு உள்ளது என்பதற்கு மதிப்பு கொடுக்க மத்திய அரசு தவறுகிறது. இதனால் வெறுப்பு அடைந்து, அதிருப்தி அடைந்து காங்கிரசுக்கு எதிரான மனப்போக்கை மக்கள் அடைந்திருக் கிறார்கள். ஆகவே, தி.மு. கழகம் தாங்கள் நினைத்ததைச் செய்யும்; காங்கிரஸ் அல்லாத கட்சிகள் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றும்; தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எல்லாம் தங்களுக்குக் கிடைக்கும் என்று ஆசைப்பட்ட மக்கள் ஒன்றைத் தெரிந்து கொண்டார்கள். இப்போது காங்கிரசு அல்லாத கட்சிகளை