பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 ம.பொ. சிவஞானம் அரசாட்சியில் அமர்த்திப் பார்த்த பிறகு ஒரு காங்கிரஸ் அல்லாத கட்சி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு ஒன்றை நிறைவேற்ற நினைத்தால், அப்படி நிறைவேற்றப்பட அரசியல் சட்டம் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை அறிந்துகொண்டார்கள். என்னுடைய சொந்த அபிப்பிராயம் ஒன்றை நான் சொல்கிறேன். ஏன், நான் சார்ந்திருக்கிற தமிழரசுக் கழகத்தின் சார்பாகவும் சொல்கிறேன். மத்தியில் போக்குவரத்து, அயல்நாட்டு உறவு, பாதுகாப்பு ஆகிய மூன்று அதிகாரங்களை மட்டும் வைத்து. மற்றவைகளையெல்லாம் மாநிலங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது என் கொள்கை. ஆனால், நான் கொடுத்துள்ள தீர்மானத்தில் அப்படி வரையறுத்துச் சொல்லவில்லை. அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டிய அவசியம் இருக்கிறது. அதிகாரப் பங்கீட்டுப் பட்டியலை மாற்றி அமைக்கவேண்டியது அவசியமாக இருக்கிறது என்ற அளவுக்கு பொதுப்படையாக இந்த மன்றம் ஒப்புக்கொண்டு, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆட்சியினுடைய கரத்தைப் பலப்படுத்தி, மத்தியத்திற்கு அனுப்பினால் போதும், விவரங்களைப் பிறகு -நடைமுறைக்கு வரும்போது பார்த்துக் கொள்ள விட்டுவிடலாம் என்ற எண்ணத்தால்தான் இந்தத் தீர்மானத்தில் விவரங்களைச் சொல்லாமல் விட்டுவிட்டேன். முடிப்பதற்கு முன்பு ஒன்று சொல்கிறேன். நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து, அனுபவித்து. நான் தெரிந்து கொண்டதைச் சொல்லுகிறேன். காங்கிரஸில் 28 ஆண்டுகாலம் இருந்து, விடுதலைப் போராட்டத்தில் இரண்டறக் கலந்துகொண்டு. எந்தெந்தக் காலத்தில். காங்கிரசிலே எப்படிப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. எந்தத் தீர்மானம்- எந்த உணர்ச்சியின் பின் அணியிலே நிறைவேற்றப்பட்டது என்ப தெல்லாம் எனக்குத் தெரியும்.