பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 63 திரிபுரா காங்கிரசிலும் அரிபுரா காங்கிரசிலும் நிறை வேற்றப்பட்ட தீர்மானம், பாதுகாப்பு- போக்குவரத்து - அயல் நாட்டு உறவு இந்த மூன்று அதிகாரங்களையும் மத்தியத்திற்கு விட்டுவிட்டு, மற்றவையெல்லாம் உடைய மாநில அரசுகள் சுதந்திர இந்தியாவில் அமையும் என்று உறுதிமொழி கொடுத்திருக்கிறது. அந்தக் காங்கிரஸ் மாநாடுகளில் தலைமை வகித்த நேதாஜி சுபாஷ்போஸ் அவர்கள் தலைமை உரையிலும் அவ்வாறு கூறபட்டிருக்கிறது. அதுமாத்திரமல்ல தனது தேர்தல் பிரகடனங் களில் மாகாண சுயாட்சிக் கொள்கையை காங்கிரஸ் வற்புறுத்தி யிருக்கிறது. இன்னும் பின்னே சென்றால், 1935வது ஆண்டு சட்டத்தை காங்கிரஸ் நிராகரித்ததற்கான காரணம் மாநிலங்களுக்குப் போதிய சுயாட்சி வழங்கப்படவில்லை என்பதுதான். 1946வது வருஷத்தில் வெளியான பிரிட்டிஷ் மந்திரி சபைத் திட்டத்தில் - இந்தியாவுக்கு சுதந்தரம் கொடுத்தபொழுது-இந்த மூன்று அதிகாரங்கள் மத்தியத்திற்கும், மற்றவைகளெல்லாம் மாநிலங்களுக்கும் என்று சொல்லப்பட்டது. இந்த மூன்று அதிகாரங்களிலிருந்து கிடைக் கின்ற நிதி வசதி மத்திய அரசுக்குப் போதுமா?- என்ற வினா எழுந்த நேரத்தில், அதிலே ஒரு விதியைப் புகுத்தியிருக்கிறார்கள். அது, மத்திய அரசுக்கு வருவாய் போதாது என்றால். மாநிலங்களிடமிருந்து மானியம் பெறலாம் என்பதாகும். இதையெல்லாம் முணு முணுப்பு இல்லாமல் ஏற்றுக் கொண்டு. இந்திய தேசிய காங்கிரஸ். இந்திய சுதந்திரத்தை ஆகஸ்டு 15ம் தேதி பிரகடனம் செய்தது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான் அரசியல் நிர்ணய மன்றம் அமைக்கப் பட்டது. இந்த அரசியல் நிர்ணய மன்றத்தில் முதல்நாள் கூட்டத்தில் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவில்,