பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64 ம.பொ.சிவஞானம் மூன்று அதிகாரங்களை மத்தியத்திற்கு வழங்கி, மற்றைய அதிகாரங்களையெல்லாம் உடைய சுயாட்சி மாநிலங்களைக் கொண்ட சுதந்திர இந்தியா உலகத்திற்கு ஒரு முன்னோடி. இந்த உலகத்திற்கு ஒரு வழிகாட்டி என்று நான் பெருமைப்படுகிறேன் என்று பேசினார். ஆனால், பிற்கால நடைமுறையில் என்னென்னவோ நிகழ்ந்து. எல்லாம் தலைகுப்புற கவிழ்ந்து விட்டதைப் பார்க்கிறோம். அரசியல் நுணுக்கங்கள் ஒருபுறம் இருக்கட்டும். நிர்வாக அடிப்படையில் இந்தப் பிரச்னையை அணுகினால்- இங்கு ஒரு கல்வித்துறை, டில்லியில் ஒரு கல்வித்துறை, போலீஸ், சுகாதாரத் துறைகள் இங்கும் இருக்கின்றன; அங்கும் இருக்கின்றன. முழு அளவுக்குப் பொறுப்பேற்று நடத்துகிற மாநில சர்க்காரிடத்தில் ஒரு பொதுச் சுகாதாரத் துறை இருக்கிறது. மத்தியிலும் ஒரு பொது சுகாதாரத்துறை இருக்கிறது. இங்கு ஒரு போலீஸ் துறை; இந்த போலீஸ் அமைச்சரை நம்பாமல், அங்கு ஒரு போலீஸ் துறை எதற்கு? நம்முடைய மதிப்பிற்குரிய சவாண் அவர்கள் மகாராஷ்டிர முதலமைச்சராக இருந்தபோது அவரை சந்தேகித்தது மத்திய போலீஸ் துறை. அவரே மத்திய உள் துறை அமைச்சரானபின், மாகாண உள்துறை அமைச்சரை சந்தேகிக்கிறார். மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருப்பவரி டம் மத்திய உள்துறைக்கு ஐயப்பாடு இருப்பதால், அங்கே மத்தியில் ஒரு போலீஸ்துறை அவசியமாகிறது. மாநிலத்தில் ஆளுநராக உள்ளவர் அந்த மாநிலத்தைச் சேராதவராக இருக்கவேண்டும் என்ற மரபு உள்ளது. அரசியல் சட்டம் அப்படிச் சொல்லவில்லை. அரசியல் சட்டப்படித் தமிழகத்து ஆளுநர் தமிழராக இருக்கக்கூடாது என்பது இல்லை. வங்காளத்தில் ஒரு சூழ்நிலை இருந்து வருகிறது. கேரளத்தில் ஒரு சூழ்நிலை இருந்து வருகிறது. சுதந்திரம் பெற்று 23 ஆண்டுகள் சென்றும், தமிழ் நாட்டில் தமிழ் மகன் ஒருவர் ஆளுநராக