பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 ம.பொ.சிவஞானம் அனைத்து மாநிலங்களுக்கும் சுயாட்சி என்பது அகில இந்தியக் கொள்கை. இந்த அடிப்படையில் 'தமிழக சுயாட்சி' என்பது கோரிக்கை. ஆக, அகில இந்திய ரீதியிலான கொள்கைக் கும் மாநில அளவிலான கோரிக்கைக்குமுள்ள உடன்பாட்டை எதிர்க்கட்சித் தலைவரவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், 18 ராஜ்யங்களோடு அமெரிக்க சமஷ்டி ஆரம்பமானது. மாநிலங்களுக்கு பரிபூரண சுயாட்சியும் பிரிந்து வாழும் உரிமையும் (ஆரம்பத்தில்) கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் தனிக் கொடியும் தனியாக ராஜ்ய கீதமும் வைத்துக்கொள்ள உரிமை வழங்கப்பட்டன. அதனால், ஆரம்பத்தில் சமஷ்டியில் சேர மறுத்த - மாநில உரிமை பறிக்கப் படுமோ என்று சந்தேகங் கொண்ட ராஜ்யங்கள்கூட, பின்னர் வலுவில் வந்து சமஷ்டியிலே இணைந்து கொண்டன. அதனால், 51 ராஜ்யங்களைக் கொண்ட பெரிய பெடரேஷனாக இன்று விரிவடைந்திருக்கிறது அமெரிக்கா, ருஷ்யாவில் ஜார் ஆட்சி காலத்தில் மாநிலங்களுக்கு சுயாட்சியில்லை. ருஷ்ய மொழி அந்த மொழி வழங்காத மாநிலங்களின் மக்கள் மீது திணிக்கப்பட்டது. ஏறக்குறைய இந்தியா இன்றுயிருக்கக்கூடிய நிலையில் ஜார் ஆட்சி காலத்தில் ருஷ்யா இருந்தது. பின்னர். இந்த நிலை மாறியது. சோவியத் சோசலிச ஆட்சியிலே, மாநிலங்களுக்கு பிரிந்து வாழக்கூடிய உரிமையோடு சுயாட்சியும் தனிக் கொடியும் வழங்கப்பட்டன. மாநில மொழிகளின் காப்புக்கு உத்தரவாதமளிக்கப்பட்டது. அதன் விளைவாக, ஜார் ஆட்சி காலத்தில் இருந்ததைவிட, இன்றைய சோவியத் ருஷ்யா நிலப் பரப்பில் விரிவடைந்திருக்கிறது. அண்டையிலுள்ள ஹாலந்து, ருமேனியா ஆகிய நாடுகளோடு ஜார் ஆட்சிக் காலத்தில் சேர்க்கவிட்டுப் போன பகுதிகளும் திரும்பவும் சோவியத் ருஷ்யாவோடு இணைக்கப்பட்டு, மாபெரும் ருஷ்யா உருவாகியிருப்பதைப் பார்க்கிறோம்.