பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் © 77 மாநிலங்களுக்குச் சுயாட்சி கொடுத்ததன் விளைவாக எந்த சமஷ்டி நாட்டிலாவது பிரிவினை ஏற்பட்டதுண்டா? உண்டென் றால், எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துக் காட்டட்டுமே! பாகிஸ்தானை எடுத்துக் கொள்வோம். அங்கு மொழிவழி மாநிலங்கள் ரத்து செய்யப்பட்டன. மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என இரண்டு மாநிலங்களையே வைத்து அந்த மாநிலங்களுக்கும் சுயாட்சி கொடுக்க மறுத்தார் ராணுவ ஜனாதிபதியான அயூப்கான். அவருக்குப் பின் வந்த அதிபர் யாகியாகான் அயூப்கானின் கொள்கையையே பின்பற்ற முயன்று முடியாமற் போகவே. இன்றையதினம் சுயாட்சியுடைய மொழிவழி ராஜ்யங்களை அமைத்துக் கொள்ள அனுமதித் துள்ளார். இதைப் பார்க்கும்போது. இராணுவ ஆட்சியாலேயே சாதிக்க முடியாத ஒன்றை ஜனநாயக ஆட்சியிலே நீங்கள் (எதிர்ப்பாளர்கள்) சாதிக்க முடியும் என்று நினைப்பதுதான் எனக்கு அச்சத்தைத் தருகின்றது. இது, நாட்டை எங்கு கொண்டு போகுமோ என்று அஞ்சுகின்றேன். இங்கு பேசியவர்கள். "மாநிலங்களுக்குச் சுயாட்சி வேண்டுமென்று கேட்டால், கிராம சுயாட்சி கேட்பார்களே" என்று சொன்னார்கள். அவர்களுக்குச் சொல்லுகிறேன். நான் காந்தியத்தை ஓரளவு புரிந்து கொண்டவன். ஆகவே, நான் கிராம சுயாட்சியை மறுப்பவனல்லன். ஆனால், அதை மாநில சுயாட்சிக்கு எதிர்வாதமாக வைக்க வேண்டாம். கிராம சுயாட்சியின் தொடக்கமாகத்தான் பஞ்சாயத்து யூனியன்கள் நிறுவப் பட்டுள்ளன. கிராம சுயாட்சி வளர்ந்துகொண்டுதான் வருகின்றது. ஆனால், நாடு சுதந்தரம் பெற்றபின்னுள்ள 23 ஆண்டு காலத்திலே-அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் - மாநிலங்களுக்கு மத்தியிலுள்ள அதிகாரங்கள் பிரித்துத் தரப்பட்டள்ளனவா? மத்தியிலுள்ள அதிகாரங்களில் ஒன்றாவது மாநிலத்திற்கு மாற்றப்பட்டதுண்டா? மாறாக, மாநிலத்திலுள்ள அதிகாரங்களில் சில மத்திய அரசுக்குச் சென்றிருப்பதைக் கண்டிருக்கின்றோம்.