பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

78 ம.பொ. சிவஞானம் நான் சொல்ல விரும்புவது. ஒரு அரசியல் நிர்ணய மன்றம். அமைத்து இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்பதுதான். இப்போதுள்ள பிரச்னை அரசியல் அமைப்புச் சட்டத்தை மாநிலங்களுக்குச் சுயாட்சி வழங்கக்கூடிய வகையில் எப்படித் திருத்துவது என்பதுதான். இங்குள்ள நாம் அரசியல் அமைப்புச் சட்டப்படி நடப்பதாகப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளோம். நான்தெய்வத்தின் பேரில் பிரமாணம் செய்துள்ளேன். ஒரு வேளை எதிர் வரிசையில் இருப்பவர்களின் (தி.மு.க. வினரின்) தெய்வ நம்பிக்கையை எதிர்க்கட்சித் தலைவரவர்கள் சந்தேகித்தாலும் என்னைப் பொறுத்தவரையில் அவ்விதம் சந்தேகிக்க மாட்டார் என்று நம்புகின்றேன். அரசியல் சட்டத்தின் 368ஆவது விதிப்படியே அந்த அரசியல் சட்டத்தை நாம் திருத்தியமைக்க முடியும். சில திருத்தங்களுக்கு நாடாளு மன்ற உறுப்பினர்களில் மூன்றிலிரண்டு பங்கினர் ஆதரவு வேண்டும். அதன்படித்தான் நேற்றுகூட நாடாளுமன்றம் அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் செய்திருக்கிறது. அதுபோல், அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு மத்திய அரசு ஒரு மசோதா கொண்டு வருமானால், இன்றுள்ள அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே நாம் கோருகிற மாநில சுயாட்சியை அடைய முடியும். நக்சல்பாரிகளை ஒடுக்க இந்திரா அரசு எதுவுஞ் செய்யவில்லையே என்று சிண்டிகேட் காங்கிரசார் சொல்லு கிறார்கள். இன்றுள்ள அரசியல் சட்டத்தின்மீது ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையின் அகோர வடிவம்தான் நக்சலைட்ஸ். இன்று படித்த இளைஞர்கள் பட்டதாரிகள் நக்சலைட்ஸ்களாக மாறிக்கொண்டு வருகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை பெருகும்படி விடாதீர்கள்! உறுப்பினர் திரு. கோதண்டராமையா (சுதந்திரா) அவர்கள், இந்தத் தீர்மானத்தை இப்போது நிறைவேற்ற வேண்டாம். வேண்டுமானால், 1972க்குப் பின் பார்த்துக் கொள்ளலாம்-