பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வான 1DDITIN 100 | 21. இடவையும் இடைமருதும் - சைவசமய குரவருள் ஒருவராகிய மணிவாசகப்பெருமான் திருவாய்மலர்ந்தருளிய திருவார்த்தை என்னும் பதிகத்திலுள்ள, 'மாலயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கருள் - செய்த ஈசன் ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலந்திகழும் கோல மணியணி மாடநீடு குலாவும் இடவை மடநல்லாட்குச் சீலமிகக் கருணையளிக்குந் திறமறி வார்எம் பிரானாவாரே' என்ற பாடலுக்கு உரைகண்ட பேராசிரியர் ஒருவர், இதில் கூறப்பெற்றுள்ள இடவை என்னுந் திருப்பதி சோழநாட்டிலுள்ள திருவிடைமருதூரேயாம் என்று எழுதியுள்ளனர். அன்றியும், திருப்பதியிலிருந்து வெளிவரும் கீழ்த்திசைக்கலைக் கழகப் பத்திரிகையில் காணப்படும் 'மாணிக்கவாசகர் காலம்' என்ற கட்டுரையிலும் இடவை என்பது திருவிடைமருதூர் என்று வரையப்பெற்றுள்ளது.' 'எனவே, திருவாசக உரையாசிரியரும் மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சியாளரும் 'இடைமருது' என்ற ஊர் 'இடவை' என்று மருவி வழங்கியிருத்தல் வேண்டும் எனக்கருதியுள்ளனர் என்பது வெளிப்படை. இடைமருதும் இடவைவும் ஓர் ஊரேயாகும் என்னும் அன்னோர் கருத்திற்கு முரணாக அவை இரண்டும் வெவ்வேறு ஊர்கள் என்பதற்குத் தக்க சான்றுகள் காணப்படுகின்றன. ஆகவே, அதனை ஈண்டு ஆராய்வாம். திருநாவுக்கரசு அடிகள் பாடியருளிய க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்திலுள்ள இடைமரு தீங்கோய் இராமேச்சரம் இன்னம்பர் ஏர்இடவை ஏமப் பேரூர், சடைமுடி சாலைக் குடி தக்களூர் தலையாலங் காடு தலைச்சங்காடு, கொடுமுடி குற்றாலங் கொள்ளம்பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு, கடைமுடி கானூர் கடம்பந் துறை கயிலாய நாதனையே காண லாமே' என்னுந் திருப்பாட்டில் இடைமருதும் இடவையும் வெவ்வேறு திருப்பதிகளாகக் கூறப்பட்டிருத்தல் காணலாம். அவற்றுள், இடைமருதிற்குச் சமயகுரவர் மூவரும் பாடியருளிய திருப்பதிகங்கள் இப்போதுள்ளமையால் அது பாடல் பெற்ற தலமாகும்; இடவைக்குத் தனிப்பதிகம் இல்லாமையாலும் க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தில் அவ்வூர் கூறப்பட்டிருத்தலாலும் அது வைப்புத்தலங்களுள் ஒன்றாகும். எனவே, அப்பரடிகள் திருவாக்கினால் இடைமருதும் இடவையும் வெவ்வேறு ஊர்கள் என்பது தெளிவாகப் புலப்படுதல் காண்க. 1. Journal of Sir Venkateswara Oriental Institute, Vol. IV, page 16S.