உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



101 இனி, திண்டுக்கல் தாலுக்காவிலுள்ள இராமநாதபுரத்தில் வரையப்பெற்ற கல்வெட்டொன்று,' மாறஞ்சடையன் என்னும் பாண்டியன் ஒருவன் சோழ மண்டலத்திலுள்ள இடவை என்ற ஊரின்மேல் படையெடுத்துச் சென்றான் என்று கூறுகின்றது. ஆகவே, இடவை என்பது சோழநாட்டிலுள்ளதோர் ஊர் என்பது தெள்ளிது. அவ்வூர், சோழமண்டலத்தில் இராசேந்திர சிங்கவளநாட்டின் உள் நாடுகளுள் ஒன்றாகிய மண்ணிநாட்டில் முற்காலத்தில் இருந்துளது என்பது தஞ்சைப் பெரிய கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. அதனை, 'இராசேந்திர சிங்கவளநாட்டு மண்ணிநாட்டு ஏமநல்லூ ராகிய திரைலோக்கிய மகாதேவிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இடக்கடவத் திருமெய்காப்பு ஒன்றும் இந்நாட்டு வேம்பற்றூராகிய அவணிநாராயணச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இடக்கடவத் திருமெய்காப்பு ஒன்றும் இந்நாட்டு இடவை சபையார் இடக்கடவத் திருமெய்காப்பு ஒன்றும்' எனவும். - 'இராசேந்திர சிங்க வளநாட்டு மண்ணிநாட்டு இடவை' யிலிருக்கும் இடையன் கூத்தன் தேவனும் ஆடவல்லானால் நிசதம் அளக்கக்கடவ நெய் உழக்கு' எனவும், போதரும் தஞ்சைப் பெரிய கோயிற் கல்வெட்டுக்களால் நன்கறியலாம். இனி, இடைமருது என்னுந் திருவிடைமருதூர், சோழமண்டலத்தில் உய்யக்கொண்டார் வளநாட்டின் உள் நாடுகளுள் ஒன்றாகிய திரைமூர் நாட்டில் உள்ளது என்பது அவ்வூரிலுள்ள திருக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. அவ்வுண்மையை, 'மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மற்கு யாண்டு க ஆவது தென்கரைத் திரைமூர் நாட்டுத் திருவிடைமருதில்' ஸ்ரீமூலஸ்தானத்துப் பெருமானடிகளுக்கு' எனவும். 'திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் உய்யக் கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு உடையார் திருவிடைமருதுடையார் கோயில்' எனவும் போதரும் திருவிடை மருதூர்க்கோயிற் கல்வெட்டுக் களால் உணர்ந்து கொள்ளலாம். இக்கல்வெட்டுக்களில் குறிக்கப் Inscription No. 690 of 1950 S.I.1. Vol.II, page 331.. Ibid, p.466 SII Vol. V No.7, 10.. Ibid No. 706. 5.