பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



105 இக் கல்வெட்டுப்பகுதியால் மதுரை கொண்ட கோப் பரகேசரிவர்மனாகிய முதற் பராந்தக சோழனது ஆட்சியின் 36-ம் ஆண்டாகிய கலியப்தம் 4044ல் திருமுடியூரிலுள்ள ஆற்றுத் தளிப்பெருமானடிகளின் திருக்கோயில் கருங்கற்கோயிலாக அமைக்கப்பெற்றது என்பதும் அதனை அவ்வாறு அமைப்பித்தவன், முதற்பராந்தக சோழன் புதல்வன் இராசாதித்த சோழனுடைய பெரும்படைத்தலைவனும் சேரநாட்டு நந்திக்கரைப் புத்தூரனுமாகிய வெள்ளங்குமரன் என்பதும் நன்கு வெளியாகின்றன. இதில் குறிக்கப்பெற்றுள்ள கலியுக ஆண்டு, கி.பி. 943 ஆகும்.' 'பெண்ணை யாற்றிங் கரையிலிருத்தல் பற்றி இத்திருக்கோயில் ஆற்றுத்தளி என்று அந்நாளில் வழங்கப்பட்டுள்ளது. அன்றியும், இற்றைக்கு ஆயிரத்துப் பத்து ஆண்டுகளுக்குமுன் இக்கோயில் அமைந்துள்ள ஊர் திருமுடியூர் என்ற பெயருடன் விளங்கியது என்பது தமிழ்க் கல்வெட்டுப்பகுதியால் தெளிவாக அறியக்கிடத்தல் காணலாம். இக்கல்வெட்டின் முற்பகுதியிலுள்ள வடமொழிச் சுலோகத்தில் இவ்வூர் மௌலி கிராமம் என்று கூறப்பட்டிருத்தல் உணரற்பாலதாகும். எனவே, திருமுடியூர் என்பது மௌலிகிராமம் என வடமொழியில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது என்று தெரிகிறது. மௌலி என்ற வடசொல், முடி என்று பொருள்படும் என்பது கற்றார் பலரும் அறிந்ததேயாகும். சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் திருமுடியூர் என்ற வழங்கப்பெற்ற இவ்வூர், பிற்காலத்தில் மௌலிகிராமம் என்னும் வடமொழிப் பெயர் எய்தி இறுதியில் கிராமம் என்று வழங்கப்பட்டுவருதல் அறியத்தக்கது. ஆகவே, திருமுடியூர் எனப்படுவதே இதன் பழைய பெயர் என்பது நன்கு துணியப்படும். '1. Epigraphia Indica, Vol. VII, p. 261.