பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அமைவது நான் பதிப்பித்த ஆய்வுலகில் பண்டாரத்தார் பணிகள்' என்னும் நூலாகும். இவ்வனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போன்று அமைவதுதான் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடும் இத்தொகுப்பாகும். நூல் வடிவம் பெறாமல் சிதறிக்கிடந்த கட்டுரைகளையெல்லாம், 'தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்' என்னும் பெயரில் இப்பொழுது நூல் வடிவில் அச்சிட்டுத் தந்துள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் அதன் இயக்குநர் முனைவர் ச.சு. இராமர் இளங்கோ அவர்களுக்கும் தமிழுலகம் சார்பாக மனம்நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடந்தை , 1-12-97. முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி தமிழ் முதுநிலை விரிவுரையாளர் அரசு ஆடவர் கல்லூரி கும்பகோணம் - 612 001.