பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 105 ததும், ஏகாம்பரம் பெருமூச்சு விட்டு நீங்க அவசரப்பட்டு இப்டி வந்திருக்கக்கூடாது மிஸ்டர் சீனிவாசன்” என்றார். இப்போது "மாப்பிள்ளை’ மலையேறிவிட்டது. சீனிவாசன் இந்த வார்த்தைப் பிரயோகத்தைப் புரிந்துகொள்ளாத போது அந்த சமயத்தில் அந்த நிலையிலும், மோகினிக்கு அப்பாவின் மிஸ்ட'ரிலிருந்து தன்னை மிஸஸ் சீனிவாச னாக்க விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டாள். அவளுக்கு ஏமாற்றந்தான். சுற்றமும் நட்பும் சூழ மாங்கல்யம் தரித்து, மணமகளாய் எஞ்ஜினியர் வீட்டுக்குப் போகமுடியாமல் போனதில் வருத்தம்தான். கொஞ்ச நேரம். அவள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். அவளைப் பிடிக்க வில்லை என்று சொன்ன அருணாசலத்தை அவள் விடப் போவதில்லை. எத்தனையோ பெரிய இடத்துப் பையன்கள், முறைப்படி திருமணம் செய்ய முன்வராததாலும் எப்படியோ காரணம் தெரியாமல் பிடித்துப்போன சீனி வாசனை மணக்க முன்வந்த தன்னை முறையில்லாமல் விமர்சித்த அவரை அவள் இரண்டிலொன்று பார்ப்பதுபோல் மனதைக் கல்லாக்கிக் கொண்டாள். மனிதனின் ஒரு பாதி யான நல்லதன்மையைத் தட்டியெழுப்பாமல் இனிமேல் மறு பாதியான கெட்ட தன்மையைத் தட்டியெழுப்பி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது என்று தீர்மானித் தவள்போல் தன்னையே ஒருமுறை சாய்த்துப் பார்த்துக் கொண்டாள். அப்புறம்... மிஸ்டர் சீனிவாசன்’ என்று இழுத்து இழுத்துப் பேசி மாப்பிள்ளையாக வந்தவனை வெறும் பிள்ளையாகத் துரத்தப்போன தந்தையை, அப்பா எனக்கு என் வாழ்க்கையை எப்படி நிர்ணயிக்கணுமுன்னு தெரியும். நீங்க போய்த் தூங்குங்க.." என்று சொன்னதும் ஏகாம்பரம் மெல்லப்பட்ட வெற்றிலையைத் துப்பிவிட்டு, மனைவி படுத் துக்கிடந்த அறைக்குப் போய்விட்டார். அவள் தன்னைப்