பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 22 சு. சமுத்திரம் கேட்கப்போகும் விலையையும், விலைமதிக்க முடியா பிள்ளை யையும், கோர்ட்டுக்குப் பனங் கேட்கும் ராஜினாமா கணவனையும் நினைத்து, சுமைதாங்க முடியாமல் கால் போன போக்கில் நடந்து இறுதியில் கடற்கரையில் போய் மணிச்கணக்காக உட்கார்ந்திருந்தாள். இரவு மணி ஒன்பதுக்கு மேலாகியும், மோகினி வராத தைக் கண்டு சீனிவாசன் புழுங்கினான். பேபிக்கு, வேலை இருந்திருக்கும்" என்று மாமனார் ஏகாம்பரம் சொன்னது அவன் காதில் விழாமல் போனதுக்குக் காரணம் இருந்தது. அவன் நண்பன் டில்லிக்காரன், அவனை இளக்காரமாகப் பார்த்துவிட்டு, எட்டுமணிக்கெல்லாம் மனைவியுடன் போயிட்டு வாரேன்' என்றுகூட சொல்லாமலே போனது இவனுக்கு என்னமோ போலிருந்தது. அவன் தன்னை மாரேஜ் நக்ஸலைட்” என்று அடிக்கடி வர்ணிப்பதை கடிதங் களில் எழுதுவதைப் பெருமையாக நினைத்து தான் உண்மை யிலேயே ஒரு புரட்சிக்காரன் என்று நம்பிய சீனனுக்கு நண்பன் பார்வையில் தான் புழுவாகப்போனதற்காக, பூச்சி போல் துடித்தான். வரவர மோகினியின் போக்கு அவனுக்குப் பிடிக்க வில்லை. முதல்நாள், தன் வீட்டில் கமலா, உஷாவிடம் அன்பொழுகப் பேசியவள், கல்யாணத்திற்குப் பிறகு, அப்பா வுக்குத் தெரியாமல் அவர்கள் இங்கே வந்தபோது, இவள் அவர்களிடம் பேசாமல் அறைக்குள் போனாள். அவர்களும் இப்போது வருவதை நிறுத்திவிட்டார்கள். மனைவியே ஆச்சரியத்தில் மூழ்கும்படி, தந்தைமீது வழக்குப் போட் டான். இவள் என்னடாவென்றால்... சீச்சீ... எவரிடமாவது பகலில் டெலிபோன் பேசினாலும், இன்னார் இன்னதுக்காக டெலிபோன் பேசினார் என்று சொல்பவள். இப்போது இரவில், படுக்கையறைவரை வரும்