பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 24 சு. சமுத்திரம் பழசுதான். ஆனால் புதுசு மாதிரி தோணுது. மோகினி அவனை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டாள். பிறகு, இன்னிக்கு மூணுமணி நேரமா ளைட்லயே இருந்தோம். இருந்தோங்கறது தப்பு. நின்னு நின்னு காலே மரத்துப்போச்சு அடையார்ல வீடு எந்தப் பக்கம்?' என்றாள். சுந்தரம் பதில் பேசவில்லை. அப்பாவைக் கோர்ட் வரை அழைத்துவிட்ட வேதனையில் தவித்துக்கொண்டிருந்தான். மோகினி பாத்ரூமிற்குள் போய்விட்டாள். மனைவியின் "அன்புக் கட்டளைக்கு மதிப்பளித்து சிகரெட் குடிப்பதை அறவே விட்டுவிட்ட அவனுக்கு, இப்போது ஒரு சிகரெட் பிடிக்கவேண்டுமென்று தோன்றியது. பையைத் துழாவி னான். காசில்லை. மனைவியிடம் கேட்க வெட்கம், பயம் எல்லாம். தலை கணக்க, உடல் கொதிக்க, அவன் படுக்கையில் போய் விழுந்தான். அவ்வளவுதான் அவனுக்குத் தெரியும். இரவு பன்னிரண்டு மணி சுமாருக்கு அவனை உகப்யி, அவன் மனைவி டெலிபோனை நீட்டிக்கொண்டே, ஒங்கப்பா ஹார்ட் அட்டாக்கில் செத்துட்டாராம். நீங்க ஒடனே போகணுமாம்” என்றாள். அவன் கை நடுங்கியதில் டெலிபோன் நடுங்கியது. தம்பி சபாபதிதான் பேசினான். அவன் பேச்சில் அழுகையைப் பிரித்து. வார்த்தைகளை எடுப்பது கஷ்டமாக இருந்தது. மேலும் விளக்கம் கேட்குமுன்னால், அவன் டெலிபோனை வைத்துவிட்டான். என்றாலும், அப்பா சாகையில் சீனி சீனி என்று சொல்லிக்கொண்டே செத்தார் என்று தம்பி சொன்னதை நினைத்து, தலையில் அடித்துக்கொண்டான். எல்லாமே கனவு மாதிரி தோன்றியது. மனைவியின் முகத்தை ஒரு குழந்தையின் குழப்பத்தோடு பார்த்தான்.