பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் I 53 மோகினி என்னப்பா சொன்னேன்' என்று கேட்கத் துவங்கி வாயைத் திறந்தபோது, சங்கர், பேபி என்ன சொன்னாங்க?' என்றான். ஏகாம்பரம், அவளை விழுங்கி விடுவதுபோலப் பார்த்துவிட்டு, கடைசியில் வார்த்தை களைக் கக்கினார். பேபி, நீ சொன்னது மாதிரியே இவரு ஆயிரத்துல ஒரு பையன். கள்ளங்கப்படமில்லாத மனுஷன். திருவோன நட்சத்திரத்துல பிறந்தவரு. கேப்பார் பேச்சைக் கேட்கிற புத்தி உண்டு. ஆனால் பெரிய்வங்க சகவாசத்தால் நல்ல நிலையை அடஞ்சிடுவாரு தசாபுத்தி அப்டி.." சங்கரும் அவரை ஆர்வத்தோடு பார்த்தான். கேள்வி கேட்க நினைத்தான். அது தேவையில்லாமல் போய் விட்டது. அவரே கேள்வி கேட்டார். நீங்க செல்ஃப் மேட் மேன், சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டிருக்கணும்.’’ ஆமாம். ' பணமுடை ஏற்படும். ஆனா அதை சாமர்த்தியமாய் சரிக்கட்டுவிங்க. "' • ஆமாம்.' குடும்பம், கெளரவம், ஆரோக்கியமெல்லாம் மோச மாவுறதுமாதிரி தோணினாலும் ஆகாது!" ஆமாம்.' ஆனால் ஒண்ணு, இன்னும் ரெண்டு மாசம் போகணும். ஒங்களுக்கு அஷ்டமத்தில் சனி. கேப்பார் பேச்சைக் கேக்கக்கூடாது. குறிப்பா பொம்பிளைங்க பேச்சைக் கேக்கவே கூடாது. ’’ மோகினி இடைமறித்தாள். சங்கர் அவள் பேச்சைக் கேட்டான்.