பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6.2 சு. சமுத்திரம் வதற்கு முன்னதாக, அவள் கன்னத்தில் பளார்’ என்று ஓர் அறை. லீலாவைத் தடுக்க ஆளில்லயா என்று மோகினி திரும்பிப் பார்த்தபோது, பிடரியில் ஒரு அறை. எப்படியோ அய்யய்யோ! அய்யய்யோ’’ என்று அவள் கூச்சல் போட்டதும், பப்ளிஸிட்டி சுந்தரம் ஓடிவந்தார். லீலாவின் கையை முதல் முறையாகப் பிடித்துத் தள்ளிவிட்டார். பல தடவை பிடிக்கப்பட்ட மோகினியின் தோளைத் தொட்டு, அவளையும் தள்ளிவிட்டார். மோகினி, நிலைகுலைந்து நின்றாள். அழவும் முடியவில்லை. அழாமலும் இருக்க முடியவில்லை. சுந்தரத்தால் பொறுக்க முடியவில்லை. ஏய் லீலா ஒனக்கு சஸ்பென்ஷன் வாங்கிக் கொடுக் கறேனா இல்லியான்னு பாரு!" லீலா அந்த மனிதரைப் புழுவைவிடக் கேவலமாகப் பார்த்தாள்: சும்மா மிரட்டாதிங்க. ஒங்கள யோக்கியன்னு நினைச்சேன். நீங்க சந்தர்ப்பம் கிடைக்காததால யோக் கியனா இருந்திருக்கிற அயோக்கியன்னு இப்போ தெரிஞ்சிக் இட்டேன். ஒங்ககிட்ட எனக்கென்ன பேச்சு? அடியே மோதினி, நீ வாழப்போன குடும்பத்த கலைச்சிட்டே பரவா யில்ல. ஆனால் வாழ்ந்துகிட்டு இருக்கிற குடும்பத்த கலைச் ஒடாதடி தெய்வம் நின்னு கேக்குண்டி! ஒன்னயும் கடவுள் உலவ விட்டிருக்காருன்னா அதுலயும் ஒரு சூட்சுமம் இருக்குடி ஒன்மூலம் எத்தன பொம்பிள பொறுக்கிப் பேர் வழிகள் பொறுப்பான உத் தியோகத்தில இருக்காங்கன்னு உலகத்துக்குக் காட்டத்தான் உன்னை வச்சிருக்காருடி1 ஆனா இது நெடுநாள் நிக்காதடி, நீ உடமப வச்சி முன்னுக்கு வர நினைக்கிறே! நான் ஒழுக்கத்த வச்சி முன்னுக்கு வர நினைக்கிறவள். அறைக்குள்ள உடம்பக் காட்டி அம்பலத்துல திமிரைக் காட்டுறது ஒரு பிழைப்பா ! ஆம்பிளைங்கள உடம்பைத் தொட விட்டுட்டு அதுல கிடைக்குற உத்தியோகம் ஒரு உத்தியோகமா! காசுக்காக