பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் I & I ஆகையால், பஸ்ஸில் இடிபாடுகளுக்கிடையே தாமதமாக அலுவலகம் வந்தாள் கலா. உள்ளே அம்மாவின் அறைக்குள் ர குமணி மன்றாடுவதையும், மேடம்' எகிறுவதையும் சத்தத்தால் உணர்ந்து, நிஜமாகவே ஒற்றுக் கேட்டாள். ரகுமணி பிச்சைக்காரன்போல் கெஞ்சிக் கொண்டிருந்தான். மேடம்... நான்... ரொம்ப. ரொம்பக் கஷ்டப்பட்ட குடும்பத்துல இருந்து வந்தவன்... பலருடைய தயவுல... டிரக் வண்டில உட்கார்ந்து... தெருவிளக்குல படிச்சு... முன் னுக்கு வந்தவன்... யார் செய்த புண்ணியத்துலயோ யூ.பி. எஸ்ஸில் செலக்ஷனாகி இந்த வேலைக்கு வந்திருக்கேன். இன்னும் புரபேஷன்கூட டெர்மினேட் ஆகல! நீங்க இது வரைக்கும் பத்தொன்பது மெமோ கொடுத் திட்டிங்க1 எனக்கு வேலை போயிட்டா என் குடும்பமே தெருவுல நிக்கும். தங்கைக்கு இப்பதான் கல்யாணம் ஆகப்போவுது. தயவுசெய்து கையால் வேணுமுன்னாலும் அடிச்சிடுங்க! ஆனால் மெமோவால மட்டும் அடிச்சிடாதிங்க... பிளீஸ் ஹேவ் மெர்ஸி!' டோண்ட் டாக் நான்சென்ஸ். பத்துமணிக்கு ஆபீஸ் : பத்தேகாலுக்கு வந்தா என்ன மீனிங்? நீ எக்ஸ்பிளனேஷன் எழுதிக் கொடுத்துத்தான் ஆகணும். இருபதாவது தடவையா மெமோ வாங்குனா இருபத் தொண்ணாவது தடவை டிஸ்மிஸ்தான் வரும். மேடம். தயவுசெய்து இரக்கங் காட்டுங்க... ஈவினிங்ல... அதிக நேரம் வேலை பாத்திருக்கறது... ஒங்களுக்கே தெரியும்.

  • பிளீஸ் கம் வித் எக்ஸ்பிளனேஷன். டோன்ட் வேஸ்ட் மை டைம்."

இறுதியாகச் சொன்னவள் போல் மோகினி, தலையைக் குனிந்து ஒரு ஃபைலை எடுத்தபோது எக்ஸ்கியூஸ் மீ மேட ம்..." என்ற குரலைக் கேட்டுத் தலைநிமிர்ந்தாள்.