பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 4 சு. சமுத்திரம் டிஸன்ட் கேர்ல். மம்மிக்கு என்னை ஒங்க பிள்ளைக் கு கொடுக்கணுமுன்னு ஆசை. அதனாலதான் அ ப் படி பேசிட்டுது. அது ஒருக்காலும் நடக்காது, வனிதாவை கட்டிக்க ராஜனுக்குக் கொடுத்து வச்சிருக்கணும்!" கலா டெலிபோனை வைத்துவிட்டு, அம்மாவைப் பார்த் தாள். அவள் முகம் பேயறைந்ததுபோல் கிடந்தது. மோகினி கத்தினாள். ஒனக்காக வாழ்றவளை ஏண்டி கொல்லாம கொல்லுற! ஒன்னால உபகாரந்தான் இல்லே, உபத்திரமாவது இல்லாம இருக்கக்கூடாதா!" உபகாரம் இல்லேன்னு சொல்ல முடியாதம்மா... நீ மட்டும் என் அம்மாவா இல்லாம இருந்திருந்தா வனிதா இந்நேரம் ஒன் கழுத்த நெறிச்சி கொன்னுருப்பாள். என் முகத்துக்காக உன் முகத்த விட்டுட்டாள்!" ஏண்டி, தெரியாமத்தான் கேக்குறேன். நான் பெற்ற பொண்ணு ஒரு ஐ ஏ. எஸ். மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப் படனுமுன்னு நினைச்சுதான் நான் வனிதாவை கட்’ பண்ணேன்... இது புரிஞ்சும் நீ என்னை ஒட ஓட விரட்டுனா என்னடி அர்த்தம்!" எனக்குக் கல்யாணம் பண்ணிக்கத் தெரியும்!” எனக்கும் தெரியுண்டி... உப்புக்குப் போறாத ரகுமணிப் பயல நினைச்சிக்கிட்டு இருக்கிறே. இவ்வளவு நாளம் நீ நல்லா இருக்கறதுக்காக அவனைக் கெடுக்கப் போனேன்! இனிமேல் நீ கெட்டுப்போகக் கூடாதுங்கறதுக்காகவே அவனைத் தீர்த்துக் கட்டப்போறேன்!" அதையும் பார்த்துடலாம்! நீ எனக்கு நன்மை செய் யுறதா இருந்தா அவருக்குத் தீமை செய்யாதே! அப்புறம் ஒன் இஷ்டம்."