பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் I 89. ருக்குப் பயன்படுத் தினதுக்கு பிரிண்டர் வீட்ல வச்சிருந்த கணக்கு விவரம் கிடச்சிருக்கு. நாளைக்கு சாஸ்திரிபவனுக்கு வாங்க, மேற்கொண்டு விசாரணை நடத்தணும். ' மோகினி வெலவெலத்துப் போனாள். உடனே சமாளித் துக்கொண்டு குழைந்தாள். நாற்பத்தைந்து வயதில், இருபத் தைந்து வயது பெண்போல் அவள் குழைந்தது இன்ஸ்பெக்ட ருக்கு எரிச்சலைக் கொடுத்தது. ஒங்க பெயர் என்ன இன்ஸ்பெக்டர்?’ என்று குழைந் தாள் மோகினி. எங்களுக்குப் பெயர் முக்கியமல்ல. பெயர் பண்ற வங்கள பிடிக்கிறதுதான் முக்கியம்." ஆல் ரைட், ஒங்க எஸ். பி. யாரு? ஐவில் ஸ்பீக் டு ஹிம். ' இந்தா பாரும்மா. இன்ஸ்பெக்டர்கிட்ட எஸ்.பியப் பற்றியும், எஸ். பி. கிட்ட டி. ஜி.யைப் பற்றியும் பேசுறது பழைய டிரிக். ஓங்கள பல வருஷமா வாச் பண்ணி இப் போதான் எவிடென்ஸ் கிடச்சிருக்கு குற்றத்தை ஒப்புக் கொண்டால் டிபார்ட்மெண்ட்டுக்கு ரிப்போர்ட் பண்ணு வோம்! அவங்க லைட்டா தண்டனை கொடுப்பாங்க. வீணா இன்ஃப்ளுயன்ஸ் பண்ணப் பார்த்தால் ஒங்கள சஸ்பெண்ட் பண்ணச் சொல்லி எழுதுவோம். கோர்ட்ல வழக்குப் போடு வோம்! அப்புறம் ஒங்க இஷ்டம். ஆல்ரைட்.. நாளைக்கி நீங்க காலையில பத்து மணிக்கு சாஸ்திரி பவனுக்கு ஆஜ. ராகணும்.’’ சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் போய்விட்டார். கலா உள்ளே வந்தாள். அம்மாவைப் பார்த்து நேரிடை யாகவே கேட்டாள். கெடுவார் கேடு நினைப்பார்னு சொல்றதன் அர்த்தத் தைப் புரிஞ்சிகிட்டியாம்மா? இப்ப எப்டி இருக்கு இப்படித் தானே பிறத்தியாருக்கு இருந்திருக்கும். நினைச்சிப் பார்த்தியா? நல்லவேளை. என்னால ரகுமணி தப்பினாரு.