பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சத்திய வெள்ளம்

அடைந்து பாதுகாப்புப் பெற்ற பழைய நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டான் பாண்டியன்.

大 ★ 大

விடுமுறைக்குப் பின் பல்கலைக்கழகம் திறந்து சில நாட்களே ஆகியிருந்தன. புது அட்மிஷன்கள் இன்னும் முடியவில்லை. பாண்டியன் அன்றுதான் பியூசி. என்னும் புதுமுக வகுப்பில் இடம்பெற்று, நியூ ஹாஸ்டல் பதி னெட்டாவது எண்ணுள்ள அறையில் தங்கியிருந்தான். ஹாஸ்டல் ரிஜிஸ்டரில் பதிந்துகொண்டு அவனை அறைக்கு அனுப்புவதற்கு முன் அவனுடைய பேதைமை நிறைந்த முகத்தைப் பார்த்து அன்பும் அநுதாபமும் சுரந்ததாலோ என்னவோ எச்சரித்து அனுப்பினார் வார்டன்.

“தம்பீ! நான் சொல்வதைத் தப்பாக எடுத்துக் கொள் ளாதே. உன் நன்மைக்காகத்தான் சொல்லுகிறேன். சீனியர் மாணவர்களிடம் சகஜமாகவும் நேச பாவத்துடனும் பழகத் தெரிந்துகொள். இந்தப் பல்கலைக்கழகத்திலுள்ள என்ஜினியரிங், மெடிகல், விவசாயப் பிரிவுகள் உட்பட எதிலும் ‘ராகிங் என்ற பெயரில் புதிய மாணவர்களிடம் பழைய மாணவர்களோ, பழகிய மாணவர்களோ எந்தக் குறும்பு செய்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று ரிஜிஸ்திரார் கையெழுத்துடன், நோட்டீஸ் போர் டில் அறிக்கை தொங்குகிறது. ஆனால், அந்த அறிக்கையை மதித்து, அதன்படியே சீனியர் மாணவர்கள் நடந்து கொள்வார்கள் என்று நீ எதிர்பார்க்கக்கூடாது. மேலும் ‘ஒரியண்டேஷன் டே கொண்டாடுவதற்கு முன் யாரையும் யாரும் எதற்காகவும் கண்டிக்க முடியாது. இதெல்லாம் நீயாகப் பார்த்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளவேண்டும். இரண்டொரு நாளைக்கு வேதனையாகத்தான் இருக்கும். அப்புறம் எல்லாம் சரியாகிவிடும். முதலிலேயே ஆத்திரப் பட்டு நீ என்னிடமோ, ரிஜிஸ்திராரிடமோ கம்ப்ளெயிண்ட்’ செய்தால் நாங்கள் சம்பந்தப்பட்ட சீனியர் மாணவர் களைக் கூப்பிட்டு விசாரிப்போம். ஆனால் அப்படி எங் களிடம் புகார் செய்வதும் உன்னோடு இருக்கும் சீனியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/14&oldid=609139" இலிருந்து மீள்விக்கப்பட்டது