பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 13

மாணவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதும் உன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. அதன் மூலம் நீ அவர்களை உன் நிரந்தர எதிரிகளாக்கிக் கொண்டு விடுகிறாய். பார்த்துச் சமாளித்துக்கொள். சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்திக் கொண்டு பின்னால் சிரமப்படாதே. உன் அறையில் ஏற்கெனவே சி. அன்பரசன் என்கிற பி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவன் இருக்கிறான்.”

‘ராகிங் பற்றி ஏற்கனவே ஊரில் சக நண்பர்களிடம் நிறையக் கேள்விப் பட்டிருந்தான் அவன். அப்பாவியான புதிய மாணவர்களும், பயந்த சுபாவமுள்ளவர்களும் கூச்சமுள்ளவர்களுமே அதற்குப் பலியாவதுண்டு என்று தன் ஊரிலிருந்து கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங் களுக்கும் படிக்கப்போய் விடுமுறைக்கு வரும் மாணவர் கள் சொல்லிக் கேள்விப்பட்டிருந்தான் பாண்டியன். இப் போது இந்த வார்டன் அநாவசியமாக அதை மிகைப் படுத்தித் தன்னை எச்சரிப்பதாகத் தோன்றியது அவனுக்கு. அவனிடம் வார்டன் பதினெட்டாம் நம்பர் அறைக் கான இரண்டாவது சாவியைக் கொடுத்திருந்தார். நியூ ஹாஸ்டல்’ என்ற அந்த விடுதி மலைச் சரிவில் இருந்தது. அறைக்குள் தன் பெட்டி படுக்கை - பொருள்களை வைத்துவிட்டு அவன் ஊர் சுற்றிப் பார்க்கப் புறப் பட்டபோது மாலை மூன்று மணி.

ஆங்கிலத் திரைப்படங்களில் வருவது போன்ற ஐரோப்பிய நாட்டு மலை நகரங்களை நினைவூட்டுவதாயி ருந்தது மல்லிகைப் பந்தல். கண்ணாடி கண்ணாடியாக ஏரிகளும், பூத்துக்குலுங்கும் பூங்காக்களும், சுற்றிலும் மேகம் மூடிய நீலமலைகளும், குப்பை கூளங்கள் அடையாத அழகிய தார் ரோடுகளும், காற்றில் வெப்பமே இல்லாத குளிர்ச்சியும் அவனுக்குப் புதுமையாயிருந்தன. ஏரி, ஏரியைச் சுற்றிய சாலைகள், கடை வீதி, நகரம், இவை தவிர பல்கலைக் கழகக் கட்டிடங்களும், விடுதிகளும், பாட்டனி பிரிவைச் சேர்ந்த பொடானிகல் கார்டனும், பூங்காக்களும், நீச்சல் குளமுமாக யுனிவர்ஸிடி காம்பஸின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/15&oldid=609161" இலிருந்து மீள்விக்கப்பட்டது