பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 163

கொண்டு வழியை மறித்து விடவே, டி.எஸ்.பி. யோ அவ ரோடு வந்தவர்களோ மேலே செல்ல முடியாமல் அப்படியே நிற்க வேண்டியதாயிற்று.

“கூட்டத்துக்கு அது மதி வழங்கப்பட வில்லை. தடையை மீறி நடத்துகிறீர்கள். இதை நான் அநுமதிக்க மாட்டேன்” என்று கத்தியபடி ஆத்திரத்தோடு கான்ஸ்டே பிள்களின் பக்கமாகத் திரும்பி, மைக் ஒலிபெருக்கிகளைப் பறிக்குமாறு டி.எஸ்.பி. கடுகடுப்போடு உத்தரவிட்டார். மாணவர்களும் பதிலுக்குச் சத்தம் போட்டார்கள். கான்ஸ்டேபிள்கள் மைக் ஒலிபெருக்கிகளைக் கழற்றுவதற் காக நின்ற இடத்திலிருந்து ஒர் அங்குலம் கூட மேலே நகர முடியவில்லை. டி.எஸ்.பி.க்கு ஒரளவு அச்சமாகவும் இருந்தது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களைக் கொதித்து எழச் செய்து, அதன் காரணமாகப் பெரிதாக ஏதாவது ஆகிவிடக் கூடாதே என்று மனத்தில் நடுக்கமும் வந்திருந்த காரணத்தால் அவர் தம் கருத்தை மாற்றி மறு பரிசீலனை செய்தார். மிரட்டுவது போல் மிரட்டி ஒரு நாடகம் ஆடிவிட்டு டி.எஸ்.பி. மோகன்தாஸை அருகில் அழைத்து, “ஆல்ரைட் பத்தரை மணிவரை இங்கே இந்தக் கூட்டத்தை நடத்திக் கொள்ள உங்களுக்கு அநுமதி தருகிறேன். அமைதியாக நடத்திக் கொள்ளங்கள். ஒரு சம்பிரதாயமான வெற்றி விழாவாக இதை அநுமதிக் கிறேனேயன்றி, என் அநுமதியைச் சாதகமாகப் பயன்படுத் திக் கொண்டு மாணவர்களை வன்முறைக்குத் துரண்டி விடவோ இங்கு ஒரு கடை சூறையாடப்பட்டது பற்றிப் பேசவோ கூடாது. உங்கள் பேச்சுக்களால் புதிய அசம்பா விதங்கள் எதுவும்நேர்ந்தவிட வழிகோலாதீர்கள் என்பதற் காகவே இவ்வளவும் சொல்கிறேன்” என்றார்.

“வன்முறைக்குத் துாபம் போட்டு வன்முறைகளை நடத்திவிட்டு ஒடிப்போனவர்களைச் செளகரியமாக ஒடிப் போக விட்டுவிட்டு, இப்போது எங்களிடம் வந்து அமைதி யைக் காக்கச் சொல்கிறீர்கள், அமைதியாக இருப்பவர் களிடம்தான் நீங்கள் அமைதியைப் பற்றிப் பேசிக் கொண்