பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 173

னார் அண்ணாச்சி. கடையின் பின்புறம் மாணவர்களும், மாணவிகளும் ஐம்பது ஐம்பது பேராகச் சாப்பிட்டு விட்டு, வெளியேற இட வசதி செய்யப்பட்டிருந்தது. ஒரு பந்தி முடிந்து அடுத்த பந்தி வந்து அமர்வதற்குள் இலைகளைப் போட்டுப் பரிமாறி உபசரிக்கக் கண்ணுக்கினியாள் தலை மையில் பத்துப் பன்னிரண்டு மாணவிகள் சுறுசுறுப்பாகப் பணியாற்றினர். -

அவர்கள் பரிமாறிய அன்பையும் மலர்ச்சியையும் பார்த்து, “நீங்கள் எல்லோருமே ஹோம் ஸயின்ஸ் மாணவிகளோ என்று சந்தேகமாக இருக்கிறது. உங்களுக்கு மிகவும் நன்றி கூறவேண்டும்” என்றான் ஒரு மாணவன். இதைக் கேட்டுக் கண்ணுக்கினியாள் சிரித்து விட்டுச் சொன்னாள்: “இல்லை! இதில் ஒருவர் கூட ஹோம் ஸயின்ஸ் மாணவி கிடையாது. நான் தியேட்டர் ஸயின்ஸ்’ படிக்கிறேன். மற்றவர்கள் எல்லோருமே ஆர்ட்ஸ் பிரிவு மாணவிகள். ஒருவேளை ஹோம் ஸயின்ஸ் மாணவிகள் பரிமாற வந்திருந்தால் அவர்கள் அனைவருமே தியேட்டர் ஸயின்ஸ் பிரிவோ என்று உங்களுக்குச் சந்தேகம் வந்திருக்கலாம்! சந்தேகங்கள் எப்போதுமே இப்படித்தான். அவை முதலிலேயே சரியாயிருப்பதில்லை. அல்லது முடிவிலே சரியாயில்லை என்று நிரூபிக்கப்படுகின்றன.”

அவள் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த மாண வர்களிடம் இப்படி உரையாடியபடியே பரிமாறிக் கொண்டிருந்த வேளையில் பாண்டியனும், மோகன் தாஸும் வேறுசில மாணவர்களும் அண்ணாச்சிக்கடை முகப்புக்குக் கூட்டமாக வந்தார்கள். அவர்களில் பாண்டி யன் மட்டும் முகப்பிலிருந்த படியே கீற்றுப் படலை விலக்கி உள்ளே தலையை நீட்டி, “ஒரு நிமிஷம் இப்படி வந்துவிட்டுப் போயேன். உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என்று கண்ணுக்கினியாளை அருகிலே கூப்பிட்டான்.

“இதோ ஹோம் ஸயின்ஸ் முடிகிறது. தியேட்டர் ஸயின்ஸ் ஆரம்பமாகப் போகிறது” என்று சாப்பிட்டுக்