பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 215

ஏரியைவிட நாலைந்து மடங்கு பெரிய இந்த எரி நகரத் தின் நடு மையமாகக் கண்ணாடி பதித்தது போல் அமைந் திருந்தது. கடைத் தெருக்கள், தியேட்டர்கள், பெரிய பூங்காக்கள், நகரசபை அலுவலகம், டவுன் ஹால் முதலிய எல்லாம் இந்த ஏரியின் நான்கு புறத்து வீதிகளிலுமே அமைந்திருந்தன. ஏரியைச் சுற்றி நான்கு புறமும் மரங்களடர்ந்த பகுதியில் மேட்டிலும் சரிவுகளிலுமாக அமைந்திருந்த குடியிருப்பு வீடுகளின் விளக்கு ஒளிகள் ஏரி நீர்ப்பரப்பில் பிரதிபலித்த காட்சி மிக மிக அழகாயிருந்தது. பஸ் நிலையத்திலிருந்து திரும்பும்போது கண்ணுக் கினியாளின் தந்தை நாயுடுவையும் தங்கள் வீட்டிலேயே வந்து தங்குமாறு அன்புடன் வேண்டினாள் சிவகாமி. நாயுடு அதற்கு இணங்காமல் அண்ணாச்சியோடு தங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்.

“நீ உன் சிநேகிதியோடு போய்த் தங்கிக்க தங்கச்சி! நாயினாவை நான் பார்த்துக்கிறேன். உல்லன் கோட் கம்பளி எல்லாம் குடுத்து இந்தக் குளிரை அவரே மறக்கும் படி செஞ்சிடறேன் என்று தந்தையைப் பற்றி மகளிடம் உறுதிமொழி கொடுத்து அனுப்பினார் அண்ணாச்சி. புறப் படுமுன் அண்ணாச்சியிடம் அந்தக் கடிதத்தை நினை வாகக் கேட்டுத் திருப்பி வாங்கிக் கொண்டாள் அவள். வேறொரு விரிவான கடிதம் எழுதி மறுநாள் அவரிடம் கொடுப்பதாகவும் அதை அவர் எப்படியும் பாண்டியனி டம் சேர்ந்துவிட வேண்டும் என்றும் குறிப்பாகப் புலப் படுத்தியிருந்தாள். ஏரிக்கரைப் பூங்கா அருகிலேயே அவர் கள் பிரிந்துவிட்டார்கள். அப்போதே மழை மீண்டும் மெல்ல மெல்லத் தொடங்கியிருந்தது. -

கடைக்குத் திரும்பியதும் பையனை அனுப்பிச் சூடாக இட்டிலி வாங்கிவரச் செய்து நாயுடுவும் அண்ணாச்சியும் இரவு உணவை முடித்துக் கொண்டார்கள். கடை முகப்பை ஒட்டிப் பின்புறம் இருந்த அறையில் ஒரு கட்டிலில் மெத்தை கம்பளி விரிப்புக்களோடு நாயுடுவைக் குளிருக்கு அடக்கமாகப் படுக்க வைத்து விட்டுப் பையன்களோடு