பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 சத்திய வெள்ளம்

“நாம் இருவரும் துணிந்து இப்படிச் சுற்றுவதைப் பற்றி உனக்கு பயமாயில்லையா?” - r

“இப்படிக் கேட்பதன் மூலம்தான் நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்கள்.”

“முதல் முதலாக என்னை அண்ணாச்சி கடையில் சந்தித்த அன்று நீதான் என்னைப் பயமுறுத்தினாய்.”

‘இப்போது ரெண்டு பேருமாகச் சேர்ந்து வி.சி.யைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறோம்.”

“இந்த வி.சி. பயப்படுவதற்குக்கூடத் துணிவு இல்லா தவர்.”

“பயப்படுவதற்குக்கூடத் துணிவு வேண்டுமா, என்ன? வேடிக்கையாகத்தான் இருக்கிறது, நீங்கள் சொல்வது?”

“ஆமாம்! பயப்படவும் ஒரு துணிவு வேண்டும். “தீமையை அநீதியை ஒழுக்கக் குறைவைக் கண்டு பயப்பட வும் ஒரு நெஞ்சுரம் வேண்டும். அது வி.சி.யிடம் இல்லை. நியாயங்களைப் போற்ற இருக்கும் துணிவை விட அநியா யங்களை விலக்கி அவற்றுக்கு அஞ்சும் துணிவுதான் பெரியது என்று நினைக்கிறேன் நான்.”

பல்கலைக் கழகம் திறந்ததும் நவம்பரில் நேரு தினத்தை மாணவர் பேரவையின் சார்பில் மிகச் சிறப்பாகக் கொண் டாட வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள் அவர்கள். பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்து உரையாடிக் கொண்டி ருந்து விட்டுத் திரும்பும்போது சிரித்துக் கொண்டே அவன் அவளைக் கேட்டான்:

“நீ என்ன ஸெண்ட் உபயோகிக்கிறாய்? உன் அருகே நடந்துவர முடியாமல் வாசனை ஆளைத் தூக்குகிறதே?” “நான் சோப்பு, பவுடர் தவிர வாசனை ஹேர் ஆயில் கூட உபயோகிப்பதில்லை. வெறும் தேங்காய் எண்ணெய் தான்.”

“பொய் சொல்லக்கூடாது?”

“நிஜமாத்தான் சொல்றேன்."