பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 235

“அப்படியானால் நீயே கமகமவென்று மணக்கிறாய் என்று அர்த்தமா?”

“சீ! ரொம்ப மோசம்! ஒரே நாளில் படுகுறும்புக்கார ராகி விட்டீர்கள் நீங்கள்.”

“எல்லாம் சகவாச தோஷம்.”

அன்று மாலை அவள் ஊருக்குப் புறப்பட்டாள். அவளையும் அவள் தந்தையையும் வழியனுப்புவதற்குப் பாண்டியனும் அண்ணாச்சியும் பஸ் நிலையத்துக்குப் போயிருந்தார்கள். பஸ் புறப்படுமுன், “மறந்துவிடாமல் அந்த நவநீத கவியின் கவிதையை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்” என்று சூசனையாக அவனிடம் தன் இதய தாபத்தைச் சொல்லி விடைபெற்றாள் அவள். அதைப் புரிந்து கொண்டு அவனும் யாருமறியாமல் புன் னகை செய்தான். பஸ் புறப்பட்டதும் அண்ணாச்சியோடு திரும்புகையில் ஒரு கணம் அந்த அழகான மலை நகரமே யாருமில்லாமல் சூனியமாகிவிட்டதுபோல் ஒரு பிரிவு பாண்டியனின் மனத்தைக் கவ்வியது. இப்படி ஒரு தவிப்பை வாழ்வில் இதற்குமுன் அவன் என்றுமே அடைந்ததில்லை.

பஸ் நிலையத்திலிருந்து அவனும் அண்ணாச்சியும் பேசிக்கொண்டே திரும்பினர். அவனும் அண்ணாச்சியும் கடைக்குத் திரும்பியதும் பல்கலைக் கழக சிண்டிகேட் கூட்டம் பற்றித் தெரிய வந்த ஒர் உண்மை அவன் கவலை தவிப்பு எல்லாவற்றையுமே வேறு பக்கம் திசை திருப்பக் கூடியதாயிருந்தது.

பத்தொன்பதாம் அத்தியாயம்

பஸ் நிலையத்தில் கண்ணுக்கினியாளையும், அவள் தந்தையையும் மதுரைக்கு வழியனுப்பிவிட்டுத் திரும்பிய

பாண்டியனை எதிர்பார்த்து அண்ணாச்சிக் கடையில் கதிரேசன் காத்திருந்தான். அண்ணாச்சியையும், பாண்டி