பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 சத்திய வெள்ளம்

யனையும் ஒரு முக்கியமான செய்தியோடு எதிர் கொண் டான் கதிரேசன். மறுநாள் காலையில் பல்கலைக் கழக “சிண்டிகேட் சந்திக்கப் போவதாகவும் அந்த சிண்டிகேட் கூட்டத்தில் உயர் நிலைப் பள்ளிப் படிப்பைக் கூட ஒழுங் காக முடிக்காத அமைச்சர் ஒருவருக்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட இருக்கிறது என்பதா கவும் கதிரேசன் தெரிவித்தபோது அண்ணாச்சியும் பாண்டியனும் முதலில் அதை நம்புவதற்கு முடியாமல் தவித்தார்கள். பாண்டியன் கதிரேசனோடு பந்தயம் கூடக் கட்டினான்.

“நீ சொல்வது உண்மையாயிராது கதிரேசன்! யாரா வது புரளியைக் கிளப்பிவிட்டிருப்பார்கள். நம்முடைய மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகச் சட்டங்களின் படியும், விதிகளின்படியும் பதினெட்டு சிண்டிகேட் உறுப்பினர் களும் ஒரு மனமாக முடிவு செய்தாலொழிய ஒருவருக்குக் கெளரவ டாக்டர் பட்டம் தர முடியாது. சிண்டிகேட்டில் அவ்வளவு உறுப்பினர்களுமே “ஆமாம் சாமிகளாக இருக்க மாட்டார்கள்.”

“இருப்பார்களோ, இருக்கமாட்டார்களோ, அதெல் லாம் எனக்குத் தெரியாது! எந்த மந்திரியை லெக்சரர் மதனகோபாலின் அயோக்கியத்தனங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு அளிக்கிறார் என்பதற்காக நாம் எதிர்த்தோமோ, எந்த மந்திரி காலமெல்லாம் மாணவ சமூகத்தைப் போலீஸ் அடக்கு முறையில் சிக்க வைத்துத் துன்புறுத்தி யிருக்கிறாரோ அதே மந்திரிக்கு-ஏதோ சில சுயநல வசதி களுக்கான ஒரு லஞ்சம்போல் இதைத் தரப் போகிறார்கள். நடக்கிறதா, இல்லையா பார்க்கலாம்? எனக்கு மிகவும் நம்பிக்கையான இடத்திலிருந்து இந்தத் தகவல் கிடைத்தி ருக்கிறது! பிச்சைமுத்து சார் சொல்லியிருப்பது போல் அறிவாளிகளும், சிந்தனையாளர்களும் சுயநலமிகளாக இருக்கிற சமூகத்தில் எந்தக் கேடும் நடக்க முடியும்.”

“ஒரே நாள் பழக்கத்தில் நிலக்கோட்டை டிரில் மாஸ்டர் உன்னை மயக்கிவிட்டார்! கதிரேசனுக்கே ஒரு