பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 சத்திய வெள்ளம்

தானும் சேர்ந்து ஒரு பஸ்ஸ்-க்கு நெருப்பு வைத்தது ஞாபகம் வந்தது. மாணவ சமூகத்தின் அன்றைய மன நிலைக்கும் இன்றைய மன நிலைக்கும் இடையே ஏற் பட்டுள்ள மாறுதல்களும், வளர்ச்சியும் அவனும் உடன் நிகழ்ச்சியாக மீண்டும் நினைவு வந்தது. பஸ் சாலையில் அந்த இடத்தைக் கடந்ததும் மறுபடியும் அவன் நினைவில் சித்திரக்காரத் தெருவும், நாடகங்களின் ஜிகினாகிரீடங்கள், உடைகள், எமீன்கள் அடங்கிய அந்த மாடிக் கூடமும், அந்த மாடியிலிருந்து செவிமடுத்த ராராம இண்டி தாக கீதத்தின் குரல் இனிமையும், பொருள் இனிமையும் அதை அவள் அப்போது தேர்ந்தெடுத்துப் பாடியதனால் தனக் குப் புரியவைத்த குறிப்பின் இனிமையும் தோன்றி இணை யற்ற இன்ப அலைகளாய்ச் சிலிர்த்துக் கொண்டிருந்தன. மாடியில் கண்ணுக்கினியாளின் தந்தையோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அவர் பழைய காலத்து மனிதர் களுக்கே உரிய முறையில் ஒளிவு மறைவு கூச்சம் எதுவும் இல்லாமல் தனது சாதி, குலம், கோத்திரம் எல்லாவற்றை யும் சுற்றி வளைத்துத் தொடங்கி விசாரித்து முடித்ததை நினைத்ததும் இப்போதுகூட அவனுக்குச் சிரிப்பு வந்தது. “எனக்குத் தெரிஞ்சு நம்ம ஆளுங்க பாண்டியன்னு பேர்வைக்கிற வளமுறை இல்லியே தம்பீ?” என்று மிகவும் தந்திரமாக விசாரித்திருந்தார் நாயுடு. அப்போதுதான் தன் குடும்பம் பற்றிய ஒர் உண்மையைத் துணிவாகவும், திடமா கவும் அவரிடம் தெரிவித்தான் பாண்டியன்.

“எங்க அப்பா தேவரு அம்மா நாயுடு. அந்த நாளிலே எங்க ஊரே அதிசயிக்கிறாப்பிலே நடந்த கலப்பு மணம்னு எங்க அப்பாவே அதைப் பற்றி அடிக்கடி பேசுவாரு. இந்தக் கலப்பு மணத்தாலே ரொம்ப நாள் எங்க குடும் பத்து நல்லது கெட்டதுகளுக்குத் தேவமாருங்களும் வரலே, அம்மா சாதி ஆட்களும் வரலேம்பாங்க. அப்பாதான் மறவர் சீமை வழக்கப்படி பாண்டித் தேவர்னு எங்க தாத்தா பேரைச் சுருக்கமாகப் பாண்டியன்’னு எனக்கு வச்சாராம்.” என்று கந்தசாமி நாயுடுவுக்குத் தான் கூறிய