பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 361

சர்வர்களிடம், “இந்தாப்பா! முதலில் ஒரு தமிழ் வாழ்க’ கொண்டு வா. வரிசைப்படி அதுதான் முதல் அயிட்டம். மறந்துவிடாதே!” என்று வம்பு செய்தார்கள்.

தீஞ்சுவைத் துண்டம் (கேக்)

வருவள் (சிப்ஸ்)

உருள் மோதகம் (போண்டா)

கலவை (மிக்ஸ்சர்)

(م) زانيتين)

தாம்பூல நறுஞ் சுருட்டு (பீடா) என்று உணவுப்பட்டியல் (மெனு அச்சிடப்பட்டுத் தரப் பட்டிருந்தது. அதில் வருவல் என்பதை வருவள்’ என்று பிழையாக அச்சிட்டுவிட்டதால், “வருபவள் யார்? அவள் யாரானாலும் வரட் டு ம். வரவேற் போ ம் “ என்று மெனுகார்டைக் கையில் துக்கிக்கொண்டு கூப்பாடு போட்டார்கள் பல மாணவர்கள். விருந்தில் வழங்கப்பட்ட கேக்கின் மேல்புறம் ஒரு கட்சியின் சின்னத்தைப் போல் ஒரு பாதி ஒரு நிறமும் மறு பாதி வேறொரு நிறமுமாக இரு வண்ணத்தில் கருமையும் செம்மையுமாக இருக்கவே மாணவர்களிடையே சலசலப்பு மூண்டது. சாக்லேட் கருப்பும் மறுபாதி செர்ரி நிறத்திலும் அந்தக் கேக்குகள் இருந்தன. கோபத்தில் சில கேக்குகள் மேடையை நோக்கிப் பறந்தன. உடனே கேக்குகள் வழங்குவது நிறுத்தப்பட்டு மற்றவைகளை வழங்கத் தொடங்கியதன் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டது.

“இந்தாப்பா! தீஞ்சுவைத் துண்டத்துக்குப் பதில் இன்னொரு கலவை கொடு!” என்று சர்வரிடம் மேலு:ய ஒரு மிக்ஸ்சர் பொட்டலத்தைக் கேட்டு ஒரு மாணவன் எழுப்பிய குரலைத் தொடர்ந்து சிரிப்பொலிகள் வெடித்தன. மேடையில் வந்து அமர்ந்திருந்த நடிகர் மணியும், நடிகை யும் பயத்தோடு உட்கார்ந்திருப்பது போலத் தோன்றியது. அவர்கள் நிலை பார்க்கப் பரிதாபகரமாக இருந்தது.

நடிகரை வரவேற்று முடித்தபின், நடிகையை வரவேற்று

வரவேற்புரை படித்த மாணவன் வரவேற்பிதழில்