பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 சத்திய வெள்ளம்

அச்சிட்டிருந்தபடியே, “நீங்கள் படத்துக்குப்படம் நன்கு தடித்து வளர்ச்சி பெற்று வருகிறீர்கள்” என்று படித்தவுடன் சிரிப்பொலிகள் அடங்க நெடுநேரமாயிற்று. படுபாவி அச்சகத்தில் வருவலை வருவளாக்கியதுபோல் ‘நன்கு நடித்து’ என்பதை ‘நன்கு தடித்து’ என்று அச்சிட்டுத் தொலைத்திருந்தான். தடித்து’ என்று பிழையாகப் படித்ததை ஒட்டி எழுந்த சிரிப்போடு சிரிப்பாக, கரெக்ட், என்றும், வெல்லெட்’ என்றும் கூட்டத்திலிருந்து குரல்கள் ஒலித்தன. சிறைப்பட்டு விட்டதுபோல் கூனிக் குறுகித் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் அந்த நடிகை வரவேற்புரை முடிந்ததும் நடிகர் பத்து நிமிஷங்கள் சுருக்கமாகப் பட்டும் படாமலும் பேசி முடித்துவிட்டார். நடிகை மழலைத் தமிழில் பயந்து கொண்டே எண்ணி மூன்று வாக்கியங்கள் பேசியதும் விழா முடிந்தது.

‘இதுபோல் அருமையான வெறைட்டி எண்டர்டெயின் மெண்ட் நம்ம யூனிவர்ஸிடியில் சமீப காலத்திலே நடந்தது கிடையாது! என்ன நகைச்சுவை! எத்தனை சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகள்?” என்று விடுதி விழா முடிந்து போகும்போது சக மாணவர்கள் பாண்டியனிடம் அந்த விழாவைப் பற்றிப் பேசிக் கொண்டு போனார்கள். அப்போது ஒரு மாணவன் கேட்டான்: “இவர்கள் எதைச் செய்தாலும் ஏன் இப்படிக் கேலிக்கூத்தாக முடிகிறது? எதனால் இவர்கள் இப்படிக் கோட்டை விடுகிறார்கள்?” “சிரத்தை இல்லாமல் வெறும் போட்டி மனப் பான்மையும் வெறியும் மட்டுமே இருந்தால் இப்படித்தான் ஆகும்! சிரத்தைதான் செயலுக்கு மூலவித்து.”

“நல்ல நகைச்சுவைதான் இது.”

“தவறு! இது நகைச்சுவையும் இல்லை. கேலிக் கூத்துக்கும் நகைச்சுவைக்கும் எங்கோ ஒரு மயிரிழை வேறுபாடு எல்லைக் கோடாக இருக்கிறது. நம்மைச் சிரிக்க வைப்பதெல்லாம் நகைச்சுவை அல்ல. நல்ல நகைச்சுவை என்பது சிரிப்பில் தொடங்குகிறது. ஆனால் அது சிரிப்