பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 365

குள் கலைப் பிரிவில் இருபது பேர், கீழ்த்திசைப் பட்டப் பிரிவில் பத்துப் பேர், பொறியியலிலிருந்து மூவர், வேளாண்மைக் கல்லூரியிலிருந்து ஐந்து பேர், மருத்துவக் கல்லூரியிலிருந்து நான்கு பேர் என்பதாக ஒரு பட்டியலோடு தயாராக இருந் தான் பொன்னையா. நாலைந்து கடைகளில் சொல்லி எல்லாருக்குமாகச் சைக்கிள் ஏற்பாடு செய்யப் போனார் அண்ணாச்சி.

அடுத்த நாள் காலை ஏழரை மணிக்குப் பணி விலகு வதற்குள்ளேயே அண்ணாச்சிக் கடை முகப்புக் கோலா கலமாக இருந்தது. பல நிறங்களில் ஸ்வெட்டர்களும் கம்பளிச் சட்டைகளும் அணிந்து, காமராக்கள், டிரான்ஸிஸ்டர்கள், பைனாகுலர்கள், மெளத் ஆர்கன், கிட்டார், தபேலா என்று பல பொருள்கள் சகிதமாகப் பட்டுப் பூச்சிகள் மொய்த்தாற்போல் மாணவ மாணவிகள் கூட்டம் கூடியிருந்தது. புஸ் புஸ்-வென்று முகத்திலும் காதோரங்களிலும் கலைந்த கூந்தலோடு, தூங்கி எழுந்த அழகுடனும் மாணவிகள் மிக வனப்பாகக் காட்சி யளித்தனர். கண்ணுக்கினியாள் கிளிப்பச்சை நிறத்தில் ஒரு முழுக்கை ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். பாண்டியன் அவளைக் கேலி செய்தான்.

“ஏதேது! இன்று பசுமைப் புரட்சி செய்கிறாற் போலிருக்கிறதே?”

“நாம் திடீரென்று பிக்னிக் கிளம்புவதே ஒரு புரட்சிதான்.”

சரியாக எட்டு மணிக்கு அவர்கள் புறப்பட்டார்கள். சங்கர் பவனில் வாங்கிய டிபன் பொட்டலங்களை ஈவு வைத்து அவரவர் பொட்டலங்களை அவரவரே சுமந்து கொண்டு வரச் செய்துவிட்டார்கள். மலைச் சாலையின் பசுமை மணத்தை நுகர்ந்தபடிய பச்சை நிறத்திலும், பொன்னிறத்திலும், தாமிர நிறத்திலுமாகத் தளிர்த்திருந்த வர்ணக் கலவையான மலைகளின் பசுமை அடர்த்தியினி டையே சைக்கிள்களில் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறினார்கள்.