பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 சத்திய வெள்ளம்

கூட்டம் இறங்கும். அதுக்குள்ளே திரும்பிடுங்க” என்று பாண்டியனிடம் எச்சரித்துவிட்டுப் போனார் அவர்.

மாலை மூன்று மணிவரை கரடியாறு தீர்த்தேக்கத்தில் பொழுது போக்கிவிட்டுத் திரும்பினார்கள் அவர்கள். திரும்பும்போது இறங்குமுகமாகையினால் போகும் போதில் ஆன நேரத்தில் சரிபாதி நேரத்துக்குள்ளேயே வேகமாகத் திரும்பிவிட்டாற் போலிருந்தது

அந்தப் பிக்னிக்’கில் கதிரேசன் கலந்து கொள்ள வில்லை. “பிக்னரிக் முடிந்த தினத்துக்கு மறுநாள் மாலை நிலக்கோட்டை டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்தார். அவர் கதிரேசனுடன் தங்கினார். அன்றிரவு கதிரேசன் அவரைச் சந்திப்பதற்காகச் சில முக்கிய மாணவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்திருந் தான். பாண்டியன், மோகன்தாஸ், பொன்னையா, நடன சுந்தரம்- எல்லாரும் போயிருந்தார்கள். பிச்சைமுத்து கூறினார்: “நம்மிடையே வர்க்க பேதத்தை ஒழித்துச் சுரண்டல் அற்ற சமுதாயத்தை அமைக்கிறவரை ஏகாதி பத்தியம் எந்த உருவிலாவது இருந்தே தீரும். இரத்த வெள்ளத்தில்தான் புரட்சிப் பூக்கள் மலர வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இன்னும் தீவிரமாக மாறித்தான் உங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். எந்த வகையிலாவது நமது இலட்சியத்தை அடைந்தே ஆக வேண்டும்! முடிவே முக்கியம். வழிகள் அல்ல! வழிகளை முடிவு நியாயப்படுத்தி விடும்.”

“இலட்சியம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமாகவும் நியாயமாகவும் அதை அடையும் மார்க்கமும் இருக்க வேண்டும் அல்லவா?” என்று பாண்டியன் அவரைக் கேட்டான். அவர் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துச் சிரித்தார். ஓரிரு நிமிஷங்களுக்குப்பின் “மணவாளனைப் போன்றவர்கள் உங்களுக்கு அப்படிச் சொல்லிக் கொடுத்தி ருக்கலாம். அந்தக் கருத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளப் பழக வேண்டும். முடிவுகள் மார்க்கங்களை நியாயப்படுத்தி