பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 383

“யாரைக் தேட்கிறீங்க...?” “அதான் அந்தப் பையன் பாண்டியனுக்கும் கதிரேசனுக்கும் நெருங்கிய பழக்கம் இருக்குமே?”

“இருக்காதுங்க. பாண்டியனுக்கும் கதிரேசனுக்கும் மனசு பிடிக்காமே சிநேகிதம் விட்டுப் போயி ரொம்ப நாளாச்சு. ஒருத்தருக்கொருத்தர் பேச்சு வார்த்தை கூடக் கிடையாது. எனக்கு நல்லாத் தெரியும்.”

“அதெப்படி? பாண்டியன்தானே மொதல் மொதல்லே பிச்சைமுத்துவைப் பார்க்கச் சொல்லி நிலக்கோட்டைக்கு கதிரேசனை அனுப்பிச்சான்? இல்லியா?”

“எனக்கு அது தெரியாதுங்க.. ஆனா சமீப காலமாகக் கதிரேசனுக்கும் பாண்டியனுக்கும் மனசு பிடிக்கலேன்னு மட்டும் தெரியுங்க..” -

அவர்கள் கேட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தார்கள். அண் ணாச்சி இப்போது பாண்டியனை நினைத்துக் கலங்கினார். பாண்டியன், கண்ணுக்கினியாள் ஆகியோர் மேல் மாணவர் இயக்கங்களின் தலைவர்கள் என்ற காரணத்தால் போலீஸ், இராவணசாமி, துணைவேந்தர் ஆகியோருக்கு இருக்கும் மனத்தாங்கல்களால் அவனுக்கு ஒரு சிறிதும் சம்பந்தமே இல்லாத இந்தக் கொலை வழக்கில் அவனை மாட்டி வைத்துவிடுவார்களோ என்று அஞ்சினார் அண்ணாச்சி. பாண்டியனை உடனே எச்சரிக்கவேண்டியது அவசியம் என்று அவருக்குத் தோன்றியது. கதிரேசன் தீவிரவாதியாக மாறிப் பாண்டியன் முதலியவர்களை அலட்சியப்படுத்தத் தொடங்கிய பின்னரும்கூடப் பாண்டியனுக்குக் கதிரேசன் மேலிருந்த பழைய நட்பும் பிரியமும் விடவில்லை என்பது அண்ணாச்சிக்குத் தெரியும். பாண்டியனைக் காப்பாற்றவே அவர் போலீஸாரிடம் பொய் சொல்லியிருந்தார். இதே போலீஸார் பாண்டியனிடம் நேரில் போய் விசாரிக்கும் போது அவன் விவரம் தெரியாமல், “நானும் கதிரேசனும் கொள்கைகளில் வேறுபட்டாலும் இன்றுகூட அவன் என் பிரியத்துக்குரிய நண்பன்தான்” என்பதாக ஏதாவது உளறி