பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 சத்திய வெள்ளம்

மாணவர்களைப் போகச் சொன்னார் துணைவேந்தர். மாணவர்கள் துணைவேந்தர் அறையைவிட்டு வெளியேறு முன் பாண்டியனே அவர்கள் சார்பில் டி.ஐ.ஜி.யிடம் காலையில் விடுதி அறைகளில் நடத்தப்பட்ட சோதனை யின்போது போலீஸார் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், அதற்கு மிகவும் வருந்துவதாகவும் கூறினான். • ,

“என்ன செய்யலாம்? எங்களுக்குச் சில கடமைகள் இருக்கின்றன. அவற்றைச் செய்ய வேண்டிய அவசரத் திலும் அவசியத்திலும் எங்களால்கூடச் சில தவறுகள் நேர்ந்துவிடலாம். பெரிய தவறுகளைப் பற்றிய உண்மை களைக் கண்டுபிடிக்கும் அவசரத்தில் நாங்களும் சில சிறிய தவறுகளைச் செய்ய நேரிட்டு விடும். அவற்றை மறந்து விடுங்கள்” என்று அன்பாகவும் கனிவாகவும் அந்த டி.ஐ.ஜி. மறுமொழி கூறியபோது பாண்டியன் ஆச்சரியம் அடைந் தான். அவன் அவ்வளவு கணிவை அவரிடம் எதிர்பார்க்க வில்லை. நாலரை மணிக்கு அவர்கள் துணைவேந்தர் அறையைவிட்டு வெளியேறினார்கள். பகலுக்குள் மூன்று முறை அண்ணாச்சிக் கடையிலிருந்து பையன் தேடிவந்தும் பாண்டியன் போக முடியவில்லை. மெஸ்ஸில் மாலைச் சிற்றுண்டி காபியை முடித்துக் கொண்டு அவனும் நண்பர் களும் அண்ணாச்சிக் கடைக்குப் போய்ச் சேர்ந்தபோது மாலை ஐந்தேகால் மணி ஆகியிருந்தது. அங்கே அவனை எதிர்பார்த்துக் கண்ணுக்கினியாள் காத்திருந்தாள். பாண்டி யனைப் பார்த்ததும் அண்ணாச்சி பதற்றத்தோடு கேட்டார்: “தம்பீ! கவனம். அந்தக் கதிரேசன் எழுதின லெட்டர், கொடுத்த பொஸ்தகங்கள் எதினாச்சும் உன் அறையிலே இருந்து நீ போலீஸ்லே மாட்டிக்கப் போறே!”

“கவலைப்படாதீங்க! கதிரேசன் கொடுத்த புத்தகங் களை எல்லாம் அவன் கொடுத்த மறுவாரமே படிச்சிட்டுத் திரும்பக் கொடுத்தாச்சு, காலையிலேயே நீங்க அங்கே வந்திட்டுப் போனப்புறம் போலீஸ்காரங்க வந்து அறை யைத் துருவிட்டாங்க. ஒண்ணும் கிடைக்கலே..."