பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 413

“சார்! சார்! போதும். இந்த ஏழையை ரொம்பப் புகழாதீங்க. இந்தத் தேசத்தின் முதல் பெரும் தொண்ட ரும் கடைசிப் பெரும் தொண்டருமான காந்தி மகான் எனக்கு இட்டப் பிச்சை இது. இதில் எதுவுமே என் சொந்தப் பெருமை இல்லீங்க... எல்லாமே அந்த மகான் அளித்த பெருமை” என்று பொருளாதாரப் பேராசிரியரை நோக்கி அடக்கமாகக் கைகூப்பினார் அண்ணாச்சி. புகழுக் குக் கூசுகிற - புகழிலிருந்து விலகி நிற்கிற இந்தப் பண்பை மணவாளனும், பாண்டியனும் அண்ணாச்சியிடம் நெடு நாட்களாகக் கவனித்து வைத்திருந்தார்கள். இருபதாம் நூற்றாண்டு மனிதர்களில் பேதைகளைப் போல் தோன்றும் இப்படிப்பட்ட மேதைகளைக் காண்டது மிகமிக அதிசயமா யிருந்தது. மகாநாட்டுப் பந்தல் தீப்பற்றியதால் வந்த புதிய நஷ்டங்களும், பழைய செலவுகளில் கொடுக்கப்பட வேண்டிய பாக்கிகளும் நிறைய இருந்தன. அண்ணாச்சி, மணவாளன், பூதலிங்கம் ஆகியோர் அளித்தவை; சென்னையிலிருந்து நடிகர் திலகம் அனுப்பியிருக்கும் தொகை முதலிய எல்லாவற்றையும் கூட்டினாலும் போதாது போலிருந்தது. ஹாஸ்டல் ஃபீஸுக்காகவும், இதர செலவுகளுக்காகவும் ஒரு வாரத்துக்குமுன் தன் தந்தை கிராம விவசாயக் கூட்டுறவு பாங்கில் எடுத்து அனுப்பி யிருந்த டிராஃப்ட்டை மாற்றி, மகா நாட்டுச் செலவுகளில் கரைய விட்டிருந்தான் பாண்டியன். கண்ணுக்கினியாள் ‘பாக்கெட் மணியாகத் தன் தந்தை அனுப்பிய தொகை களிலிருந்து மீதம் பிடித்து இருநூறு ரூபாய் நன்கொடை கொடுத்திருந்தாள். வேறு சில மாணவ மாணவிகளும் இப்படியே உதவியிருந்தார்கள். -

கெடுக்க வேண்டும் என்றே சதி செய்து மாணவர் மகா நாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்த மல்லை இராவண சாமியின் வீட்டுக்கோ, அவரது கட்சி அலுவலகத்துக்கோ கண்டன ஊர்வலம் போய்ப் பெருந்திரளாகக் கூடி மறியல் செய்ய வேண்டும் என்று செயற்குழுவில் சில மாணவர்கள் கூறிய யோசனையை மணவாளன் ஏற்கவில்லை.