பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 w சத்திய வெள்ளம்

கடை பயில்வான்கள் மாணவர்களை இப்படித் துரண்டி விடுவது எங்களுக்குத் தெரியும். நாங்கள் நினைத்தால் அவர்களைப் பூண்டோடு அழித்து நசுக்கிவிட முடியும்” என்று பேசியிருந்தார்கள். அண்ணாச்சி அதைக் கேட்டுப் புன்னகை புரிந்தார்.

“நான் ஒரு சத்யாக்கிரகி! வன்முறைகள் புரிவதைக் கோழையின் செயல்களாக நினைக்கிறவன். என்னைப் பற்றி இப்படிப் பேசறதாலே இவங்கதான் தரக் குறைவா நடந்துக்கிறாங்க. இதுனாலே நான் கெட்டவனாகிவிட மாட்டேன். என்னைக் கெட்டவனாகக் காண்பிக்க இவங்க முயற்சி பண்ணிட்டதாலே நான் கெட்டவனாகி விட வில்லை” என்று அவர் மனம் நினைப்பதைக் காட்டுவது போல் இருந்தது அந்தத் தூய முகத்தின் புன்னகை.

முப்பத்து ஐந்தாவது அத்தியாயம்

மறுநாள் காலையில் கண்ணுக்கினியாள் மதுரைக்குப் புறப்பட்டாள். முன்பு அவர்கள் பேசி வைத்துக் கொண்ட மாதிரி அவள், பாண்டியன், மணவாளன் எல்லாரும் சேர்ந்தே ஊருக்குப் புறப்பட முடியாமற் போய்விட்டது. பாண்டியனுக்கும், மணவாளனுக்கும் அங்கே செய்து முடிக்க வேண்டிய வேலைகள் இன்னும் மீதம் இருந்தன. அதனால் அவர்களே அவளை முதலில் புறப்பட்டுப் போகச் சொல்லிவிட்டார்கள். மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் அதிகாலை முதல் பஸ்ஸில் குளிரோடு குளிராக அவளை வழியனுப்பும் போது, “வளைகள், செயின், மோதிரம் எல்லாம் எங்கே என்று உங்க நாயினாவும், அம்மாவும் உன்னைக் கேட்டால் என்ன பதில் சொல்லப் போகிறாய்?” என்று வினவினான் பாண்டியன். இதைக் கேட்டு ஒரு பதிலும் சொல்லாமல் அவனைப் பார்த்துச் சிரித்தாள் அவள். அப்புறம் பஸ் புறப்படு வதற்குச் சில விநாடிகளுக்கு முன், “அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. நிம்மதியாக மற்ற வேலைகளைக்