பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சத்திய வெள்ளம்

விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டார். அவர் புறப்படு முன் உணர்ச்சி வசப்படாமல் இருக்கும்படி மீண்டும் அவர்களை எச்சரித்துவிட்டுப் போனார்.

நேரம் அதிகமாகி விட்டதால் தன் அறைக்குப் போகாமல் மோகன் தாஸ்-சம் பாண்டியன் அறையிலேயே படுத்துவிட நினைத்தான். இருவருக்கும் அறைக் கதவைத் திறந்து விட்ட பொன்னையா நெற்றிமேட்டில் பிளாஸ்திரி ஒட்டுடன் பாண்டியனைப் பார்த்ததும் திடுக்கிட்டான். நடந்தவற்றைக் கேள்விப்பட்டதும் தூக்கம் கலைந்து அவர்களோடு அவனும் பேச உட்கார்ந்து விட்டான். பேச்சுக்குரல் கேட்டுப் பக்கத்து அறைகளிலிருந்தும் இரண்டொருவர் வந்துவிட்டனர். பாண்டியன் மோகன் தாலைக் கேட்டான்:

“பல்கலைக் கழக எல்லையில் நெருக்கடி நிலைமை இருப்பதாகத் துணைவேந்தர் சொல்லியபோது நீயும் நானும் அப்படி இல்லை என்று மறுத்தோம் அல்லவா? அதற்குப் பதிலாக நெருக்கடி நிலைமையைப் பிரத்யட் சமாக நமக்கு நிரூபிப்பதற்குத்தான் இந்தக் கல்லெறிக் தாக்குதலே நடத்தப்பட்டிருக்கிறது. தம்முடைய முடிவை நாளைக்குக் காலையில் பத்து மணிக்கு ரிஜிஸ்திரார் ஆபீஸ் நோட்டீஸ் போட்டில் அறிவிக்கப் போவதாக வி.சி. சொல்லிவிட்டார். ஒருவேளை அவர் திட்டப்படியே ‘பல்கலைக் கழகத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை யின் காரணமாகத் தேர்தல்களைத் தள்ளிப் போடுவதாக’ அறிவித்துவிட்டால் மாணவர்களாகிய நாம் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை இப்போதே முடிவு செய்து கொள்ள வேண்டுமே ? நாம் என்ன செய்யலாம்?”

“பேரவைத் தேர்தல் நடைபெறுகிற வரையில் வகுப்பு களுக்குப் போவதில்லை என்று அறிவிப்போம். நாளை மாலை ஒரியண்டேஷன் என்ற பேரில் எல்லா மாணவர் களையும் பூபதி ஹாலுக்கு எதிரே மைதானத்தில் கூட்டி வைத்துக் கொண்டு, ‘மை டியர் ஸ்டுடண்ஸ் ஹியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/62&oldid=608816" இலிருந்து மீள்விக்கப்பட்டது