பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 9i

யோசித்து யோசித்து ஒவ்வோர் இடமாக விசாரித்தும் அவனைப் பற்றி அப்போது எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. நண்பர்கள் துணுக்குற்றார்கள். மணவாளன் அதிர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டார்.

“பாண்டியன் எத்தனை பெரிய சாமர்த்தியசாலி என்று நான் நினைத்தேனோ, அத்தனை பெரிய ஏமாளி யாக முன்யோசனையின்றிப் போய் மாட்டிக் கொண்டு விட்டான். இவ்வளவுக்கும் இந்தப் பல்கலைக் கழகத்தில், தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பாக எப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் நடக்க முடியும் என்பது பாண்டி யனுக்கு நன்றாகத் தெரியும். இரண்டு வருஷங்களுக்கு முன் முத்துராமலிங்கம் என்ற இருபது வயதுப் பையனை அவன் பேரவைக் கூட்டுச் செயலாளனாகப் போட்டியிட்டவனுக் காகத் தீவிரமாக வேலை செய்தான் என்பதற்காக இர வோடு இரவாக அவனுக்கு வேண்டிய யாரோ கூப்பிட்டு அனுப்புவதுபோல் அனுப்பி அடித்துக் கொன்று நீச்சல் குளத்தில் தூக்கிப் போட்டுவிட்டார்கள். அப்புறம் துணை வேந்தர், போலீஸ், ஆர்.டி.ஓ. எல்லாருமாகச் சேர்ந்து சதி செய்து வயிற்று வலி பொறுக்க முடியாமல் தண்ணிரில் குதித்து மாணவன் தற்கொலை என்று உண்மையை மறைத்துப் பத்திரிகைகளில் வேறு விதமாகச் செய்தி வரச் செய்திருந்தார்கள். அதற்கு முந்திய வருஷம் பேரவைத் தேர்தலில் தலைவனாகப் போட்டியிட்ட மாணவனையே கடத்திக் கொண்டு போய் எங்கோவைத்துவிட்டார்கள். அடர்ந்த காடுகளும், உயரமான மலைகளும் சூழ்ந்த மல்லிகைப்பந்தல் பல்கலைக் கழகத்தில் இப்படிக் குழப்பங் களைச் செய்கிறவர்களுக்கு இயற்கையான வசதிகளும்கூட இருக்கின்றன. எல்லாம் தெரிந்தும் பாண்டியன் அவசரப் பட்டு ஏமாந்துவிட்டானே? இப்போது அவனை எங்கே என்று தேடுவது? எப்படிக் கண்டுபிடிப்பது ?” என்று வருத்தப்பட்டார் மணவாளன்.

அண்ணாச்சி பொன்னையாவை உடன் அழைத்துக் கொண்டு லேக்வியூ ஹோட்டலுக்குப் போய், அறைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/93&oldid=608747" இலிருந்து மீள்விக்கப்பட்டது