பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஒத்துழையாமை குத் துன்பம் உண்டாவதாகவே எண்ண வேண்டும். உதாரணமாக, வைத்திய உதவி பெற வொட்டாமல் தடுப் பது கொலை செய்ய முயற்சி செய்வதாகவே அற நூல்கள் கூறும். இறக்கும் தறுவாயிலிருப்பவனுக்கு வைத்திய உதவி செய்ய மறுப்பதற்கும் கொலை செய்வதற்கும் வித்தி யாசம் இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. ஆயுதப் போர் முறை கூட பகைவனுக்கு வைத்திய உதவி தேவை யாளுல் வழங்க வேண்டு மென்றே கூறுகின்றது. கிரா மத்திலுள்ள ஒரே கிணற்றை உபயோகிக்க வொட்டாமல் தடுப்பது கிராமத்தை விட்டுப் போய் விடும்படி கூறுவதே யாகும். தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவரை இந்த விதமாக கிர்ப்பக்திப்பதற்கு ஒத்துழையாமையாளருக்கு எவ்வித உரிமையும் கிடையாது. பொருமை யின்மையும் சகிப்புத் தன்மை யின்மையும் நிச்சயமாக இந்தப் பெரிய இயக்கத்தைக் கொன்று விடும். ஜனங்களை கிர்ப்பங்கம் மூலம் நல்லவர்கள் ஆக்க நமக்கு உரிமை கிடையாது. சம் முடைய கருத்துக்கு மரியாதை செய்யுமாறு பலாத்காரம் மூலம் கிர்ப்பந்திக்க அதை விட உரிமை கிடையாது. அது நாம் வளர்க்க விரும்பும் ஜனநாயக உணர்ச்சிக்கு நேர் விரோதமாகும். - 25 அதனுல் ஒத்துழையாமையாளர்கள் சமூக பகிஷ்கார வலையில் விழுந்து விடாமல் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். சமூக பகிஷ்கார முறையை அனுஷ்டிக்க வேண்டாம் என்று கூறுவதைக் கொண்டு, அப்படிப் பட்டவர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ள வேண் டும் என்று கூறுவதாக எண்ணலாகாது. ஜீவாதாரமான விஷயங்களில் உறுதியானதும் தெளிவானதுமான பொது ஜன அபிப்பிராயத்தை எதிர்ப்பவன் சமூக செளகரியங்க ளும் வசதிகளும் பெற முடியாது. அகல்ை காம் அவ னுடைய விட்டில் நடைபெறும் திருமண விருந்துக்ள்